தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் கூட மக்களின் மனதில் நீங்காத இடத்தில் இருப்பார் என்றே கூறலாம். அவர் செய்த உதவிகளை பற்றி அவருடன் பயணித்த நபர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. அப்படி பலருடைய மனதில் இருந்து வரும் வார்த்தைகள் விஜயகாந்த் பலருக்கும் சாப்பாடு போட்டு உதவி செய்தது தான். பல பிரபலங்கள் இதனை பற்றி பேசியதை நாம் பார்த்திருப்போம் .

அப்படி தான் சாரப்பாம்பு சுப்புராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். பேட்டியில் பேசிய அவர் ” விஜயகாந்த் அண்ணன் 100 இயக்குனர்கள், 100 உதவி இயக்குனர்கள், 100 பேர் என அனைவருக்குமே ஒரே நேரத்தில் சாப்பாடு போட்டு அவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பார். படப்பிடிப்பு சமயத்தில் தூங்குவதற்கு கூட தாமதமாக தான் வருவார்.

read more- சூரிக்கு பாராட்டு மழை தான்…பெர்லினில் கவனம் ஈர்த்த ‘கொட்டுக்காளி’ திரைப்படம்.!

படப்பிடிப்பு எல்லாம் முடிந்து அனைவரும் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கி இருப்பார்கள். சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். அந்த சமயம் விஜயகாந்த் அண்ணன் வருவார். நாங்கள் ஒரு முறை அண்ணா வாங்க என்று எழுந்துவிட்டோம். ஒரு சிலர் மட்டும் தூங்கி கொண்டு இருந்தார்கள். நாங்கள் சத்தம் போட்டதை பார்த்துவிட்டு அமைதியாக இருங்கள் அவங்க தூங்கட்டும் எழுப்பாதீங்க என்று கூறினார்.

read more- தெலுங்கு எல்லாம் இல்லை தமிழ் தான்! ‘தளபதி 69’ படத்திற்காக விஜய் எடுத்த முடிவு?

கூறிவிட்டு அந்த பக்கம் சும்மாக இடம் இருந்தது அந்த இடத்தில் படுத்து தூங்கிவிட்டு அடுத்த நாள் அனைவரும் கண் முழிப்பதற்கு முன்பாகவே அதாவது 5 மணிக்கு எழுந்து குளித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிடுவார். அவரை போல ஒரு மனிதரை நான் என்னுடைய வாழ்வில் பார்த்ததே இல்லை” எனவும் விஜயகாந்த் பற்றி சாரப்பாம்பு சுப்புராஜ்  பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment