கமலின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு.!

கமல் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவன் இருக்கின்றான் படத்தினை குறித்த தகவலை கூற இசைப்புயல் மற்றும் உலகநாயகன் இணைந்து நேரலையில் சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் கமல் ‘தலைவன் இருக்கின்றான் ‘ படத்தையும் இயக்கி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படம் கமல் நடித்த தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது. தேவர் மகன் படத்தில் நாசரின் மகன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறியது ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் இந்த படத்தில் , கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் பூஜா குமார் நடிக்கவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது அனைத்து கேள்விகளுக்கும் பதிலோடு தலைவன் இருக்கின்றான் படத்தினை குறித்து கூற வருகிற ஜீன் 11ஆம் தேதி 5 மணிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இணைந்து லைவில் சந்திப்பதாக கூறியுள்ளனர். அதாவது இருவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் உரையாடல் நடத்த இருப்பதாகவும், இதன் மூலம் தலைவன் இருக்கின்றான் படத்தினை குறித்த தகவலை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த தகவலை ஏ. ஆர். ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் இந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

 

Recent Posts

ஆந்திராவில் 2,000 ஆயிரம் கோடி ரூபாயுடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்.!

Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…

4 hours ago

என்னதான் ஆச்சு .. ?அறிவித்தவுடன் சொதப்பும் இந்திய வீரர்கள்… கவலையில் ரசிகர்கள் !

Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…

4 hours ago

கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் முயற்சி.? காங்கிரஸ் அமைச்சரின் சர்ச்சை கருத்து.!

Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…

4 hours ago

உருவாகிறது பயோபிக்! அண்ணாமலையாக நடிக்கும் விஷால்?

Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…

4 hours ago

கொளுத்தும் வெயிலில்.. இந்த 6 மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரத்தில் கோடை மழை.!

Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…

5 hours ago

அசத்தலான சுவையில் முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…

5 hours ago