மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என நான் புகாரளித்தால் சோதனை நடத்துவார்களா? மு.க.ஸ்டாலின் கேள்வி

மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என நான் புகாரளித்தால் சோதனை நடத்துவார்களா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

சமீப காலமாக தமிழகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  நடைபெற உள்ளது.

Image result for துரைமுருகன்

இந்நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை  சோதனை நடத்தினார்கள்.துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தினார்கள்.அதேபோல் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள்.

இந்த  வருமான வரித்துறையினரின் சோதனைக்கு  எதிர்க்கட்சியினர் கடும்  தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டன தெரிவித்துள்ளார்.அதில்,மோடி அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் வருமானவரி சோதனை நடக்கிறது. புகாரளித்ததால் சோதனை செய்கிறார்கள் என தமிழக தேர்தல் அதிகாரி கூறுகிறார் .மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள்ளது என நான் புகாரளித்தால் சோதனை நடத்துவார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணியின் தோல்வி உறுதியானதால் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் நடந்துள்ள ஃபாசிஸ்ட் பாய்ச்சலையும் – சேடிஸ்ட் சேட்டையையும் கண்டு திமுக அஞ்சாது.மேலும் பணவிநியோகத்தை தடுக்க நினைத்தால் பிரதமரின் தலைமையில் சுதந்திர அமைப்புகள் இயங்க கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் நேரடிப் பார்வையில் சுதந்திரமான அமைப்புகள் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment