சுரக்காய் வடை செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சுரைக்காய் வடை – சுரைக்காய் வைத்து வடை செஞ்சிருக்கீங்களா..வாங்க இப்பதிவில் தெரிஞ்சுக்கலாம்.

சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை எப்போதும் நாம் குழம்பு , பொரியல் போன்றவற்றையே  செய்யாமல் இது போல் வடை செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சுரக்காய் நம் உடலில் உள்ள தேவையில்லாத உப்பு நீர்களை வெளியேற்றும்.

தேவையான பொருட்கள் :

  • சுரைக்காய் =1 கப் [துருவியது]
  • அரிசிமாவு =1 கப்
  •  பச்சைமிளகாய் =2
  • பெரிய வெங்காயம் =2
  • பூண்டு =4 பள்ளு
  • சீரகம் =1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன்
  • கருவேப்பிலை ,கொத்தமல்லி =சிறிது
  • எண்ணெய் =தேவையான அளவு

bottle gourd

செய்முறை :

முதலில் சுரைக்காய் துருவி எடுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு ,பெரிய வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

garlic onion

சுரக்காயில் தண்ணீர் இருந்தால் அதை வடித்து விட்டு ,அதில் அரிசி மாவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். தண்ணீர் பற்றவில்லை என்றால் எடுத்து வைத்துள்ள சுரக்காய் நீரை பயன்படுத்திக் கொள்ளவும்.

spices 1

இப்போது அதில் மஞ்சள் தூள், சீரகம், கருவேப்பிலை கொத்தமல்லி இலைகளை சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வடை பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.

vada make

காய்ந்த பிறகு கையில் சிறிதளவு எண்ணெய் தடவி மாவை  மெல்லிசாக தட்டி எண்ணெயில் போடவும்.  இலையை பயன்படுத்தியும் மாவை  தட்டி பொறிக்கலாம். இப்போது எண்ணெயில் போட்ட வடை பொன்னிறமாக வரும் வரை பொறித்து எடுத்தால் நீர் சத்து மிக்க சுரக்காய் வடை தயாராகிவிடும்.