மக்களவை தேர்தல்… எந்தந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவு!

Lok Sabha Elections : நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்.19-ம் தேதி 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

Read More – மக்களவை தேர்தல்… முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்கள்!

மீதமுள்ள இடங்களுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். அதன்படி, இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26 தேதியும், மூன்றாம் கட்டம் மே 7 தேதியும், நான்காம் கட்டம் மே 13 தேதியும், ஐந்தாம் கட்ட வாக்குப் பதிவு மே 20 தேதியும், ஆறாம் கட்டம் மே 25 தேதியும், இறுதியாக ஏழாம் கட்ட வாக்குப் பதிவு ஜூன் 1 தேதியும்  நடைபெறும்.

Read More – மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெறும் – தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

இந்த நிலையில், கர்நாடகா, ராஜஸ்தான், திரிபுர மற்றும் மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு, வேட்புமனு தாக்கல் மார்ச் 28 தேதியும், வேட்புமனு தாக்கல் நிறைவு ஏப். 4, வேட்புமனு பரிசீலனை ஏப். 5, வேட்புமனு வாபஸ் ஏப். 8 தேதியும் நடைபெறுகிறது.

Read More – Assembly Election: 4 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.!

சத்தீஸ்கர் மற்றும் அசாமியில் மூன்று கட்டமாக நடைபெறுகிறது. இதுபோன்று, ஒடிசா, மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் நான்கு கட்டங்களாக நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேலும், உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

Leave a Comment