இந்தியா

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.? ஏற்பாடுகள் தீவிரம்…

ஜார்கண்ட்: அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் போதிய ஆதாரமில்லை என ஜாமினில் வெளியில் வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நிலமோசடி புகாரின் கீழ் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றகாக கூறி அமலாக்கத்துறை அப்போது, ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை கைது செய்தது. பின்னர் அமலாக்கத்துறை விசாரணையில் இருந்த ஹேமந்த் சோரனுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்று கடந்த வாரம் ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.

தான் கைது செய்யப்படுவதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். மேலும், அந்த பதவி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஜாமீனில் இருந்து வெளியே வந்த ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்க முனைப்பு காட்டி வருகிறார் என செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதற்கான முக்கிய பேச்சுவார்த்தை இன்று ஹேமந்த் சோரன் வீட்டில் நடைபெற்றதாகவும் உடன் கூட்டணி கட்சியான  காங்கிரஸ் கட்சியின் ஜார்கண்ட் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், மாநில தலைவர் ராஜேஷ் தாக்கூர், ஹேமந்த் சோரனின் மனைவியும் எம்எல்ஏவுமான கல்பனா சோரன், ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்ட மூத்த கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்  என கூறப்படுகிறது.

இந்த ஆலோசனை கூட்ட முடிவில், ஜார்கண்ட் மாநில முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் நியமிக்க ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், கூட்டணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இன்று மாலையில் கூட சம்பாய் சோரன் தனது ராஜினாமா கடிதத்தை ஜார்கண்ட் மாநில ஆளுநரிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் வெளியகி வருகின்றன.

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

6 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

7 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

8 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

12 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

13 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

13 hours ago