உலக பாஸ்போர்ட் தரவரிசை.! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்.?

சர்வதேச அளவில் ஒவ்வொரு நாடும், மற்ற உலக நாடுகளில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல விசா பயன்பாடுகள் இன்றி பயணிக்கும் வசதியை கொண்டு அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை கணக்கிடப்படும். அதாவது ஒரு நாடு எந்த நாட்டினரை விசா பயன்பாடுகள் இன்றி வரவேற்கிறது எனபதை பொறுத்து அந்த நாட்டின் பாஸ்போர்ட் வலிமை தெரியவரும்.

இந்த பாஸ்போர்ட் வலிமை தரவரிசை பட்டியலை சர்வதேச தரவு ஆராய்ச்சி அமைப்பான ஹென்லி அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்ற இறக்கங்களை பெற்று வரும் இந்திய பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தாண்டு 80வது இடத்தை பெற்றுள்ளது.

அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புங்க..சீனாவிடம் கெஞ்சிய மாலத்தீவு அதிபர்..!

முதலிடத்தில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளாக நான்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், இரண்டு ஆசிய நாடுகளும் இடம் பெற்றுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும், ஆசியாவில் இருந்து ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் உலக அளவில் 194 நாடுகளில் குறிப்பிட்ட இடங்களுக்கு விதிமுறைகளுடன் செல்ல விசா தடை இல்லை என முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில், உலக அளவில் 193 நாடுகளில் உள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு விசா இன்றி செல்ல அனுமதி பெற்று, தென் கொரியா, பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உள்ளன. ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் 192 நாடுகளில் உள்ள இடங்களுக்கு விசா அனுமதியின்றி செல்ல அதிகாரம் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளன.

191 நாடுகளில் உள்ள இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் லண்டன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு தரவரிசைகள் உயர்ந்து நான்காவது இடம் பெற்றுள்ளது .

இந்தியா, உலகில் உள்ள 62 நாடுகளில் உள்ள இடங்களுக்கு விசா இல்லாத அணுகலுடன் 80வது இடத்தை பெற்றுள்ளது. இதில், தாய்லாந்து, இந்தோனேசியா, மொரிஷியஸ், இலங்கை மற்றும் மாலத்தீவுகள் போன்ற பிரபலமான சுற்றுலா தலங்கள் உள்ளன.  ஆப்கானிஸ்தான் வெறும் 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாத அணுகலை பெற்று தரவரிசையில் கடைசி இடத்தில் உளது.