ஹாட்ரி விக்கெட்டை பறித்த ஹர்ஷல் படேல்.., சீட்டுக்கட்டு போல சரிந்த மும்பை ..!

மும்பை அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 111 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற 39-வது போட்டியில் சென்னை vs கொல்கத்தா இடையேயான போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து, மற்றோரு போட்டியான பெங்களூரு மற்றும் மும்பை ஆகிய இரு அணிகளும் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடியது. இதில், டாஸ் வென்ற மும்பை முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி, தேவதூத் படிக்கல் களமிறங்கியனர். ஆனால், வந்த வேகத்தில் படிக்கல் டக் அவுட்டானார். நிதானமாக விளையாடி வந்த கோலி 51 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.

இவரை தொடர்ந்து ஸ்ரீகர் பாரத் 32 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் மேக்ஸ்வெல் 56 ரன்கள் அடித்து வெளியேற இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து165 ரன்களைஎடுத்து. மும்பை அணியில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் இருவரும் களமிறங்க சிறப்பான ஆட்டத்தை விளையாடினர்.

நிதானமாக விளையாடிய வந்த குயின்டன் டி காக் 24 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் இஷான் கிஷன் களமிறங்க சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்த்தை கொடுத்தார்.

பின்னர் களம் கண்ட வீரர்கள் நிலைத்து நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷான் கிஷன் 9, சூர்யகுமார் யாதவ் 8 , க்ருனால் பாண்டியா 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால், மும்பை 95 ரன் எடுத்து 5 விக்கெட்டை இழந்து இருந்தது. ஆனால், களத்தில் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா இருவரும் இருந்ததால் மும்பை அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த எதிர்பார்ப்பை 17 ஓவரில் ஹர்ஷல் படேல் மாற்றினார்.

காரணம் ஹர்ஷல் படேல் அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்,
ராகுல் சாஹர் ஆகிய மூன்று பேரை தொடர்ந்து விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரி விக்கெட்டை பறித்தார். இறுதியாக மும்பை அணி 18.1 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 111 ரன்கள் எடுத்து 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூர் அணியில் ஹர்ஷல் படேல் 4,  யுஸ்வேந்திர சாஹல் 3, க்ளென் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டை பறித்தனர்.

இப்போட்டியில் பெங்களூர் வெற்றி பெற்றதால் தொடர் 2 தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை தக்க வைத்தது. அதே நேரத்தில் மும்பை அணி ஹாட்ரி தோல்வியை தழுவியுள்ளது.

murugan

Recent Posts

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து உங்களை பாதுகாக்கும் பதநீர்..!

பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…

18 seconds ago

வெயிலில் மயங்கிய சிறுவர்கள்.. தோல்வியில் உலக சாதனை நடன நிகழ்ச்சி.. வருந்திய பிரபு தேவா.!

Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…

29 mins ago

கில்லியை மிஞ்சியதா தீனா? ரீ-ரிலீஸில் செய்த வசூல் விவரம் இதோ!

Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…

43 mins ago

‘ஏமாற்றம் தான் மிச்சம்’ – மனம் உடைந்த ரிங்கு சிங் குடும்பத்தினர்..!

Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…

43 mins ago

ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளே… இன்று மாலை முக்கிய அப்டேட்.!

EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…

1 hour ago

விருதுநகர் வெடிவிபத்து – FIRஇல் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!

Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…

1 hour ago