எச்-1 பி விசா தற்காலிகமாக ரத்து.! டிரம்ப் அதிரடி அறிவிப்பு.!

அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி இருந்து வேலை செய்வதற்காக பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த, எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகமாக பெற்று வருகின்றனர்.

இந்த விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் இருக்க முடியும். அதன் பின் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சட்டமாக உள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. இந்நிலையில், எச்-1 பி விசா வைத்து இருப்பவர்கள் வேறு வேலையைத் தேட வழியில்லை, 60 நாட்களுக்குப் பின் கால நீட்டிப்பிற்காக அனுமதியும் கோர முடியாது.

இதைத்தொடந்து, கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் வேலை இழப்பு அதிகமாக உள்ளது. இதன் காரணமாக எச்-1 பி விசா பற்றிய விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக்கி உள்ளார்.  இதனால், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் எச் 1 பி  இந்த ஆண்டு இறுதிவரை ரத்து செய்வதாக  அமெரிக்க அதிபர்  டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவால் அமெரிக்காவில் உள்ள 5 லட்சம் பேருக்கு வேலைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் லட்சக்கணக்கானனோர் வேலைகளை இழந்துள்ளனர்.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

29 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

33 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

51 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

54 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

54 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago