தனி மையானம் அமைத்து சாதி பிரிவினையை தமிழக அரசே ஊக்குவிப்பதா -சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் அருகே பாலத்தின் மேலிருந்து சடலம் கயிறுகட்டி இறக்கப்பட்டதுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே  பட்டியலினத்தை சேர்ந்த குப்பன் என்பவர் ஒரு விபத்தில் இறந்துவிட அவரது உடலை தங்கள் நிலத்தின் வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதனால் அவரது உறவினர்கள் வேறுவழியின்றி 20அடி  உயரத்தில் பாலத்தின் மேலிருந்து கயிறுகட்டி இறக்கினர்.இந்த செயல் சமூக வலைதளங்களில் பரவ பெரிய விவாதத்திற்கு உள்ளாக்கியது .

இந்த தகவல் அறிந்து சென்னை உய்ரநீதிமன்றம் தானாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்தது. இதனிடையே இதுகுறித்து விளக்கமளிக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது .

இந்நிலையில் இவ்வழக்கு குறித்து தாசில்தார் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார் அதில் அவர் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு 50 சென்ட் இடம் மையானம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் .இதனை கேட்ட நீதிபதி  தெருக்களின் பெயர்களில் உள்ள சாதியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆனால் இன்னும் பள்ளிகளில் ஆதி திராவிடர் என்பது நீக்கப்படவில்லையே ஏன் என கேள்வியெழுப்பினார் .

ஒரு பிரிவினருக்கு  என தனி மையானம் அமைத்து  அரசே சாதி பிரிவினையை  ஊக்குவிப்பதா ? என்றும் ஆதி திராவிடருக்கு தனி மருத்துவமனை மற்றும் காவல்நிலையம் என்று இருக்கிறதா என்று கேட்டு  அதிருப்தி தெரிவித்தார் .இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் வரும் 28ம் தேதி அறிக்கை தர உதிரவிட்டுள்ளார்.

 

 

 

 

Dinasuvadu desk

Recent Posts

உடல் எடையை குறைக்க விபரீத பயிற்சி.! 6 வயது குழந்தை உயிரிழந்த சோகம்.!

America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…

24 mins ago

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

35 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

1 hour ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

1 hour ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

2 hours ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

2 hours ago