கிரிக்கெட்

‘கடவுள் ஒரு திட்டம் வச்சிருப்பாரு..’ வைரலாகும் ரிஷப் பண்ட் பதிவுகள் ..!

ரிஷப் பண்ட் : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராகன ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஒரு பெரிய பங்காற்றினார் என்றே கூறலாம். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் இவருக்கு விபத்து ஏற்பட்டது, அதன்பிறகு 2023 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணி விளையாடிய  எந்த ஒரு தொடரிலோ அல்லது அந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலோ விளையாடவில்லை.

அதன்பிறகு அவர் அந்த விபத்திலிருந்து படிப்படியாக மீண்டு  வந்தார். மேலும், இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக மீண்டும் சரியாக சொன்னால் 528 நாட்களுக்கு பிறகு மீண்டும் ரிஷப் பண்ட்  களத்தில் கால்பதித்தார். நடைபெற்ற அந்த ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி அணியின் கேப்டனாக செயலாற்றி நன்றாகவே விளையாடினார்.

அதனால் அவருக்கு இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பு கிடைத்தது. மேலும்,  4வது அல்லது 5வது விக்கெட்டுக்கு களமிறங்கும் அவர் இந்த 20 ஓவர் பேட்டிங் ஆர்டரில் 3-வது களமிறங்கினார். அந்த வாய்ப்பை அருமையாகவும் பயன்படுத்தி இருக்கிறார். அவர் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மட்டும் 171 ரன்கள் குவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தொடரில் இந்திய 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை வென்று அசத்தியது. இதன் கொண்டாட்டத்தை தற்போது வரை இந்தியா அணி வீரர்கள் நாளுக்கு நாள் கொண்டாடி வருகின்றனர். அதன்படி ரிஷப் பண்ட் நேற்று அவர் அவரது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ” ‘நான் ஆசீர்வதிக்க பட்டவனாகவும், பணிவானவாகவும் மற்றும் நன்றியுடனும் இருக்கிறேன். கடவுள் அவருக்கென ஒரு திட்டம் வைத்திருப்பர்’ என கூறி வீடியோ பதிவிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் அவர் விபத்துக்கு பிறகு மீண்டு வரும் காட்சிகள் அதாவது உடற்பயிற்சி செய்வது போன்று 28 நொடிகள் அடங்கிய அந்த வீடீயோவையும் பதிவிட்டிருந்தார். மேலும், இன்று காலை மீண்டும் ஒரு பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் உலகக்கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு கிடைத்த மெடலுடன் புகைப்படம் எடுத்திருப்பார்.

இந்த 2 பதிவிக்குகளும் இப்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும், நேற்று அவர் பதிவிட்ட அந்த வீடியோ பதிவில் பலரும் ‘சிம்பதிக்காக இப்படி மீண்டும் மீண்டும் விபத்தை நினைவுபடுத்தி வீடியோ வெளியிட வேண்டாம்’ என கூறி வருகின்றனர். ஆனால், அவரது ரசிகர்கள் அவருக்கு உறுதுணையாக நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Recent Posts

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

37 mins ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

5 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

6 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

6 hours ago

ஓட்டுனர் இல்லாமல் ஓடிய பேருந்து…டயரில் சிக்கி ஒருவர் பலி…கண்கலங்க வைக்கும் வீடியோ..!

உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…

6 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..! DA 4% உயர்வு..!

குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…

6 hours ago