#GCCBudget2023:தூய்மை வார்டுகளுக்கு வெகுமதி அறிவிப்பு -மேயர் பிரியா.!

சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் .

அதில் “சுகாதாரத் துறையின் கீழ் நடத்தப்படும் மருத்துவ முகாம்களுக்கு அனைத்து கோட்டங்களுக்கும் கூடாரம், மேஜை மற்றும் நாற்காலி வாடகை முறையில் அமர்த்தி கொள்ள ரூ.45 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்து மண்டலம் வாரியாக தேவையின்படி பகிர்ந்து அளிக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில், மண்டலங்கள் 4, 5, 6, 7 மற்றும் 8 ஆகியவற்றில் பணிபுரியும் 10,002 எண்ணிக்கையிலான தூய்மை பணியாளர்களுக்கு, ஆண்டிற்கு இரண்டு எண்ணிக்கையிலான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் புதிய வடிவமைப்புடன் கூடிய சீருடைகள் வழங்கப்படும். இதற்காக மாநகராட்சியின் வருவாய் நிதியிலிருந்து ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ரூ.1.88 கோடி மதிப்பில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் எனவும் குப்பையில்லாமல் தூய்மையாக பராமரிக்கும் வார்டுகளை தேர்ந்தெடுத்து வெகுமதிகள் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா ராஜன் அறிவிப்பு.

சுகாதாரத் துறையின் கீழ் பணிபுரியும் NULM தற்காலிக தொழிலாளர்களுக்கு நலப்பொருட்களும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மழைக்கவச உடை (Raincoat) மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படும் இதற்காக ரூ.18.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

IPL2024: சாம் கரன் அதிரடி.. ராஜஸ்தானை வீழ்த்தி பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ..!

IPL2024: பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும்,…

30 mins ago

2014, 2019, 2024 தேர்தல் பிரமாண பத்திரங்களும்… பிரதமர் மோடியின் சொத்து விவரமும்..

சென்னை : 2014, 2019, 2024 பொதுத்தேர்தல்களில் பிரதமர் மோடி வெளியிட்ட தேர்தல் பிரமாண பத்திர விவரங்களின்படி சொத்து விவரங்கள் தெரியவந்துள்ளன. இந்திய பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள்…

5 hours ago

என்னது 150 கோடியா? முடியவே முடியாது ‘GOAT’ படத்தை வாங்க மறுத்த நிறுவனம்!

சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய…

5 hours ago

அவர் பசியோட இருக்காரு .. அவர டீம்ல எடுத்துருக்கனும் ..! இளம் வீரருக்கு கங்குலி ஆதரவு !!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி, ஆஸ்திரேலியா இளம் வீரரான ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இந்த 2024 ஆண்டின் ஐபிஎல்…

5 hours ago

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!

சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் 19ம்…

6 hours ago

வெயில் காலத்தில் ஏற்படும் சூட்டு கொப்பளம் நீங்க சூப்பரான டிப்ஸ் இதோ.!

Heat boils-சூட்டு கொப்பளங்கள் ஏன் வருகிறது என்றும் அதை சரி செய்யும் முறை பற்றியும் இப்பதிவில் காணலாம். சூட்டு கொப்புளம் வர காரணங்கள் : குளிர்காலத்தில் எப்படி…

6 hours ago