நாடாளுமன்ற நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
பின் பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.அதன் பின்னர் அவர் கூறுகையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியது மத்திய உள்துறை அமைச்சகம் . மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்நிலையில் டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் நாடாளுமன்ற நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.கஜா புயல் பாதிப்புக்காக மத்திய அரசு வழங்கியுள்ள நிதி, தமிழக அரசு கோரியுள்ள நிதி மற்றும் தற்போது வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விளக்கமளிக்கிறார் தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.
அதேபோல் தமிழக வருவாய் செயலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த அதிமுக எம்.பி.க்களும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…
Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…