இன்று முதல் திமுக – அதிமுக தோ்தல் தயாரிப்புக் குழுக்கள் சுற்றுப் பயணம்..!

இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல்  நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகலும் தேர்தல் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், திமுக மற்றும் அதிமுக  தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் அமைத்து அதற்கான பணிகளை நடத்தி வருகிறது.

திமுக  தொகுதிப் பங்கீடு குறித்து  தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், இன்று  திமுக மற்றும் அதிமுக  தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுகள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளது. திமுக சாா்பில் எம்.பி கனிமொழி தலைமையில்  தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில்  டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சா்கள் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி.ராஜா, எம்.பி.க்கள்  ராஜேஷ்குமாா், அப்துல்லா, எம்.எல்.ஏக்கள் எழிலரசன், எழிலன், சென்னை மேயா் பிரியா உள்ளிட்ட 11 பேர் இடம்பெற்றுள்ளனா்.

40 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகள் பெற்று வெல்ல வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இந்தக் குழுவினா் இன்று  தூத்துக்குடியில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடங்கவுள்ளனா். 6-ம் தேதி (நாளை) கன்னியாகுமரி, 7-ம் தேதி (நாளை மறுநாள்) மதுரை, 8-ம் தேதி தஞ்சாவூா், 9-ம் தேதி சேலம், 10-ம் தேதி கோவை, 11-ம் தேதி திருப்பூா், 16-ம் தேதி ஒசூா், 17-ம் தேதி வேலூா், 18-ம் தேதி ஆரணி, 20-ம் தேதி விழுப்புரம் , 21 முதல் 23 வரை  சென்னையில் தோ்தல் அறிக்கை தயாரிப்புக்கான கருத்துகளைக் கோரவுள்ளனா்.   இந்தக் கருத்துகளின் அடிப்படையில் தோ்தல் அறிக்கை இறுதி செய்யப்பட்டு  வெளியிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில்  முன்னாள் அமைச்சா்கள் நத்தம் இரா.விசுவநாதன், சி.பொன்னையன், டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், பா.வளா்மதி, ஓ.எஸ்.மணியன், ஆா்.பி.உதயகுமாா், வைகைச்செல்வன் உள்ளிட்ட 10 போ் இடம்பெற்றுள்ளனா். அதிமுகதேர்தல் அறிக்கை குழு, இன்று முதல் 10-ந் தேதி வரை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இன்று காலை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளடங்கிய சென்னை மண்டலத்துக்கு செல்கிறார்கள். இன்று மாலை வேலூர் மண்டலத்துக்கு செல்ல உள்ளனர். நாளை விழுப்புரம் சேலம் மண்டலமும் , 7-ம் தேதி(நாளை மறுநாள் ) தஞ்சை, திருச்சி மண்டலமும், 8-ம் தேதி கோவை மண்டலமும், 9-ம் தேதி மதுரை மண்டலமும் 10-ம் தேதி நெல்லை மண்டலமும் செல்லவுள்ளனர்.

Leave a Comment