கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர அவகாசம் நீட்டிப்பு.! – உயர்கல்வித்துறை அறிவிப்பு.!

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு என உயர்கல்வித்துறை அறிவிப்பு.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை இணையத்தில் வெளியிடப்பட்டது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 7% குறைவு என கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்டுவதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. CBSE 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், உயர்கல்வித்துறை இதனை அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபின் 5 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு கொடுத்த அழுத்தத்தால் முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.40 லட்சம் இடங்களில் சேர 4 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுபோன்று 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இடமில்லை என எந்த தனியார் கல்லூரியும் மறுக்கக்கூடாது எனவும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Leave a Comment