இனி ஏர்போர்ட்டில் இந்த சேவைக்கு கூடுதல் கட்டணம் இல்லை.. விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.!

இந்திய அரசியல் சட்டம் 1937ஆம் ஆண்டு விதி 135இன் படி விமான நிலையத்தில் விமான நிறுவனங்கள் போர்டிங் பாஸ் போன்ற கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது. 

வழக்கமாக இந்தியாவில் உள்ள ஏர்போர்ட்களில் இருந்து வெளியே வரும் பயணிகளிடம் அதிகாரிகள் செக் செய்யும் போது போர்டிங் பாஸ் கோருவது வழக்கம். இதற்காக விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும்.

இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என இந்திய அரசியல் சட்டம் 1937ஆம் ஆண்டு விதி 135இன் படி தடை செய்யப்படட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு அண்மையில் இந்திய விமானதுறை அமைச்சகம் டிவிட்டரில் கூறுகையில், போர்டிங் பாஸ் கட்டணம் விமான நிறுவனங்கள் தனியாக வசூலிக்க கூடாது என அறிவித்துள்ளது.

2020, மே மாதம் 21ஆம் தேதி முதல் இணையதளம் மூலமே பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தது,

Leave a Comment