கதைல ட்விஸ்ட்., தான் எப்போதும் வரமாட்டேன் என்று ரஜினி அறிவிக்கவில்லை – தமிழருவி மணியன்

தான் எப்போதுமே அரசியலில் அதுயெடுத்து வைக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை என தமிழருவி மணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து காந்தி மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காந்தி மக்கள் இயக்கத்தில் ரஜினி மக்கள் மன்றத்தை சார்ந்த பலர் இணைந்து பணியாற்ற என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். ரஜினி ஒரு நாள் அரசியலலுக்கு வருவார், முதல்வர் பதவியில் அமர்வார் என்ற கனவில் நீங்கள் அவருடைய ரசிகர்களாக மாறவில்லை. அவருடைய இயல்பான நடிப்பு, அடக்கம், ஒளிவு மறைவின்றி உரைக்கும் நேர்மை, ஒவ்வொருவரிடமும் பழகும் உயர்குணம் ஆகியவற்றில் மக்கள் அனைவரும் அவருடைய ரசிகர்களாக மாறினர்கள்.

அவருக்காக எதையும் இழக்கம் துணியும் உங்கள் அர்ப்பணிப்பைக் கண்டு தான் நெஞ்சம் நெகிழ்திருக்கிறேன். பாழ்பட்ட அரசியலைப் பழுது பார்க்கவே ரஜினி அரசியல் உலகில் அடியெடுத்து வைக்க முயன்றார். காலச் சூழல் அவருடைய கனவை நனவாக்க இடம் தராத நிலையில், தற்போது அவர் கட்சி தொடங்குவதை தவிர்த்திருக்கிறார். தான் எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்க போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைத்துவிடவில்லை. ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை நான் அடியோடு வெறுக்கிறேன்.

காந்தி மக்கள் இயக்கம் இந்த செயலில் மறந்தும் ஈடுபடாது என்று உறுதிபட அறிவிக்கிறேன். காந்தி மக்கள் இயக்கம், ரஜினி மக்கள் மன்றத்தின் சகோதர அமைப்பாக தொடர்ந்து செயல்படும். அவரவர் இருந்த இடத்தில் இருந்தபடி, கரங்கள் இணைந்து காரியமாற்றுவோம். தரம் தாழ்ந்து, தன்னலம் வாய்ந்த அரசியலை என்றும் நான் நடத்தவில்லை. ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள பணிகளில் காந்தி மக்கள் இயக்கம் ஈடுபடும். மேலும், மார்ச் 7-ஆம் தேதி திருப்பூரில் பொதுக்குழு கூடவிருக்கிறது. நாளையே ரஜினி அரசியலுக்கு வந்தாலும், காந்தி மக்கள் இயக்கம் அவருடன் சேர்ந்தே பணியாற்றும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

7 mins ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

44 mins ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

47 mins ago

கத்திரி வெயிலை ஈடுகட்ட வருகிறது கோடை மழை.! கனமழையும் இருக்குங்க.. எங்க தெரியுமா?

Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…

1 hour ago

மறைந்தும் உணவு அளிக்கும் வள்ளல்.. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.!

Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…

2 hours ago

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…

2 hours ago