வடசென்னை.! உங்கள் தொகுதி.. உங்கள் பார்வைக்கு….!

வட சென்னை மக்களவைத் தொகுதி 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட மறுசீரமைப்பிற்கு முன் இராயபுரம், துறைமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர் (தனி), திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. மறுசீரமைப்பிற்கு பிறகு பெரம்பூர் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. வில்லிவாக்கம் பிரிக்கப்பட்டு கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) எனும் சட்டமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன.

வடசென்னை தொகுதி திமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. காரணம் திமுக இதுவரை 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும்,  அதிமுக ஒரு முறையும், சுயேட்சை வேட்பாளர் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தொகுதியில் முதல்முறையாக 1957-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது சுயேட்சை வேட்பாளர் அந்தோணி பிள்ளை என்பவர் வெற்றி பெற்றார். பின்னர் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சீனிவாசனும், 1967, 1971 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த மனோகரன் என்பவர் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார்.

பின்னர் திமுகவை சார்ந்த 1977-ம் ஆண்டு ஏ.வி.பி.ஆசைத்தம்பி,  1980-ம் ஆண்டு கோ.லட்சுமணன், 1984-ம் ஆண்டு என்.வி.என்.சோமு ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன் மூலம் திமுக 1967 முதல் 1984 வரை தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 1989, 1991 ஆகிய இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தா.பாண்டியன் என்பவர் தொடர்ந்து 2-முறை வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்து நடைபெற்ற  1996 -ம் ஆண்டு என்.வி.என்.சோமு (திமுக), 1998,1999 மற்றும் 2004-ம் ஆண்டு செ.குப்புசாமி (திமுக), 2009 -ம் ஆண்டு டி.விகே எஸ் இளங்கோவன் (திமுக) வெற்றி பெற்றனர். இதன் மூலம் திமுக மீண்டும் தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றி பெற்றது. முதல்முறையாக அதிமுக சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டி.ஜி வெங்கடேஷ் பாபு வெற்றி பெற்றார்.

2019 நாடாளுமன்ற தேர்தல்:

பின்னர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 10 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிட்டனர். திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் ஆர். மோகன்ராஜை 4,61,518 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 5,90,986 வாக்குகளும், தேமுதிக வேட்பாளரான அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் 1,29,468 வாக்குகளும் பெற்றார்.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன:

திருவொற்றியூர்
ராதாகிருஷ்ணன் நகர்
பெரம்பூர்
கொளத்தூர்
திரு.வி.க. நகர் (தனி)
இராயபுரம்

2021-ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்:

  • திருவொற்றியூர் ( திமுக வெற்றி )

கே. பி. சங்கர்(திமுக)    = 88,185 (வாக்குகள்)

கே.குப்பன் (அதிமுக)     = 50,524  (வாக்குகள்)

  • ராதாகிருஷ்ணன் நகர்  ( திமுக வெற்றி )

ஜே. ஜே. எபினேசர் (திமுக)       = 95,763 (வாக்குகள்)

ஆர்.எஸ். ராஜேஷ் (அதிமுக)    = 53,284 (வாக்குகள்)

  • பெரம்பூர்  ( திமுக வெற்றி )

ஆர். டி. சேகர் (திமுக)                     =  105267 (வாக்குகள்)

என்.ஆர். தனபாலன் (அதிமுக) =  50,291 (வாக்குகள்)

  • கொளத்தூர் ( திமுக வெற்றி )

மு.க.ஸ்டாலின் (திமுக)    = 105522 (வாக்குகள்)

ஆதி ராஜாராம் (அதிமுக) = 35,138 (வாக்குகள்)

  • திரு.வி.க. நகர் (திமுக வெற்றி)
பி.சிவகுமார்(திமுக)              =81,727 (வாக்குகள்)
பி.எல் கல்யாணி (அதிமுக)  =26,714 (வாக்குகள்)
  • இராயபுரம் ( திமுக வெற்றி )

ஐட்ரீம் இரா. மூர்த்தி (திமுக) =  64,424 (வாக்குகள்)

ஜெயக்குமார் (அதிமுக)          =   36,645 (வாக்குகள்)

வாக்காளர்கள் எண்ணிக்கை:

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் படி வட சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 14,84,689 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 7,24,968 பேரும், பெண் வாக்காளர்கள் 7,59,208 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள்  513 பேர் உள்ளனர்.

Recent Posts

பிரதமர் மோடி பற்றி அவதூறு.. 100 கோடி ரூபாய் பேரம்.! டி.கே.சிவகுமார் மீது பரபரப்பு குற்றசாட்டு.!

சென்னை: பிரதமர் மோடி பற்றி அவதூறு பரப்பினால் 100 கோடி ரூபாய் தருவதாக டி.கே.சிவகுமார் பேரம் பேசினார் என தேவராஜே கவுடா குற்றம்சாட்டியுள்ளார். கர்நாடகா ஹாசன் தொகுதி…

34 mins ago

ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி !! ராஜஸ்தான் – கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய இரவு போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளில் கடைசி…

42 mins ago

ஒழுங்கா நடிக்கலைனா அடிப்பாரு! மம்முட்டி குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன பிரபலம்?

சென்னை : ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் மம்முட்டி முடித்துவிடுவார் என பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்முட்டி.…

2 hours ago

ஹோட்டல் சுவையில் நூடுல்ஸ் இனி வீட்டிலேயே செய்யலாம்.!

Noodles recipe-ஹோட்டல்களில் கிடைப்பது போல் அதே சுவையில் நூடுல்ஸ் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருள்கள்: நூடுல்ஸ் =150 கிராம் எண்ணெய் =5…

2 hours ago

ஆறுதல் வெற்றியை பெறுமா பஞ்சாப் அணி ? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை !!

சென்னை : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 69-வது போட்டியாக இன்று…

4 hours ago

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

11 hours ago