கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48 திட்டப்பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள் என முதல்வர் ட்வீட். 

செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது  பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நீரிழிவு, பிசியோதெரபி உட்பட 5 வகை நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து,  நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48 திட்டப்பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். 188 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையைத் தொடங்கி வைத்தேன். கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள்!’ என பதிவிட்டுள்ளார்.