மத்திய பிரதேசம் கொரோனா மரணங்களை மறைக்கிறதா?என்ன நடக்கிறது அதிர்ச்சி தகவல் !

இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை ருத்திர தாண்டவம் ஆடி வருகிறது.அதில் மத்திய பிரதேசத்தில் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள தகன மற்றும் புதைக்குழிகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன.இது கொரோனா தொற்றின் செங்குத்தான உயர்வைப் பிரதிபலிக்கிறது. ஆனால் அம்மாநில அரசு வெளியிடும் தினசரி பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை உண்மைதானா என்ற சந்தேகம் கலந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

போபால் எரிவாயு அழிவு:

1984 ஆம் ஆண்டு ஏற்பட்ட  போபால் எரிவாயு அழிவிற்கு  பின்னர் இதுபோன்ற காட்சிகளைக் காணவில்லை என்றும் ,அந்த அளவுக்கு அங்கு சடலங்கள் எறிவூட்டப்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.

தனது சகோதரரின் இறுதிச் சடங்குகளைச் செய்ய வந்த 54 வயதான பி.என். பாண்டே செவ்வாயன்று கூறுகையில்: “போபால் எரிவாயு அழிவின் போது, ​​நான் 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்,அப்பொழுது  ​​இதுபோன்ற காட்சிகளைக் கண்டோம். இன்று நான்கு மணி நேரத்தில் 30-40 இறந்த உடல்களைப் இங்கு  பார்த்தேன் என்றார்”.

மாறுபடும் சடலங்களின் எண்ணிக்கை:

ஏப்ரல் 8 ஆம் தேதி, போபாலில் கொரோனாவுக்கான நெறிமுறையின் கீழ் 41 சடலங்கள் தகனம் செய்யப்பட்டன, ஆனால் அன்று மாநிலம் முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 27 என்று அரசு வெளியிட்டது.இதைப்போல் ஏப்ரல் 9 ம் தேதி, போபாலில் 35 சடலங்கள் தகனம் செய்யப்பட்டன, ஆனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் முழு மாநிலத்திலும் 23 கொரோனா தொடர்பான இறப்புகள் என்று தெரிவித்தனர.

இதைபோல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை போபாலில் தகனம் செய்யப்படும் சடலங்களின் எண்ணிக்கையும் மாநில அரசு வெளியிடும் எண்ணிக்கையும் வித்தியாசமாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

மறுக்கும் மாநில அரசு:

இதனை அம்மாநில அரசு திட்டவட்டமாக  மறுத்துள்ளது.இறப்பு எண்ணிக்கையை மறைக்க அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை, அவ்வாறு செய்வதன் மூலம் எங்களுக்கு எந்த விருதும் கிடைக்காது” என்று மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் சாரங் கூறினார்.

தகனத் தொழிலாளிகளின் பதில்:

இதுபற்றி போபால் தகனத் தொழிலாளி ரைஸ் கான் கூறுகையில், அவர்கள் ஒவ்வொரு நாளும் 100-150 குவிண்டால் மரங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் 40-45 உடல்கள் வருகின்றன என்றார்:

மற்றொரு தொழிலாளி பிரதீப் கனோஜியா கூறுகையில் : “நான் பலவீனமாக உணர்கிறேன், சோர்வாக இருக்கிறேன் … ஏராளமான இறந்த உடல்கள் வந்து கொண்டிருக்கின்றன, அது இங்கே கூட்டமாக இருக்கிறது. மதிய உணவிற்கு கூட நாங்கள் ஓய்வு எடுக்க முடியாது என்றார்.

நேற்று மட்டும்:

மத்திய பிரதேசத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8,998 பேர் கொரோனாவினால்  பாதிக்கப்பட்டுள்ளனர் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.இது மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை 3,53,632 ஆகவும்,இறந்தவர்களின் எண்ணிக்கையை 4,261 ஆக உயர்த்தியுள்ளது.