திகிலை கிளப்பும் ‘ஷைத்தான்’….முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Shaitaan box office: இயக்குனர் விகாஸ் பால் இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஷைத்தான்’ திரைப்படம் நேற்றைய தினம் (மார்ச் 8, 2024 ) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், கோலிவுட் நடிகை ஜோதிகா மற்றும் ஆர் மாதவன் நடித்துள்ளனர். அதாவது, படத்தில் ஜான்கி போடிவாலா அஜய் தேவ்கன் மற்றும் ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார்.

READ MORE – ஷில்பா மஞ்சுநாத்தை கதறி அழவைத்த உதவி இயக்குனர்! அவரே சொன்ன வேதனை கதை!

படத்தின் கதை சூனியம் மற்றும் வசீகரம் அடிப்படையாகக் கொண்டது. ‘ஷைத்தான்’ குஜராத்தி திரைப்படமான ‘வாஷ்’ படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஹிந்தியில் உருவாகியுள்ள இப்படம் நல்ல ஓபனிங்கை பெற்று முதல் நாளில் ரூ.14.50 கோடியை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

READ MORE – Oscars 2024: ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா எங்கு? எப்போது?

இன்னும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், படம் வெளியான முதல் நாளே பாசிடிவ் விமர்சனத்தை பெற்றதால், இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால், மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும், படத்தின் நாயகி தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளியை எடுத்துக்கொண்டு, பாலிவுட்டில் அதாவது இந்த திரில்லர் படத்திலும் திறமையாக நடித்து வசூலை குவிந்துதது பெரிய சாதனையாக தான் பார்க்கப்படுகிறது.

READ MORE – அத மட்டும் விடவே மாட்டேன்! நடிகை ரித்திகா சிங் பிடிவாதம்!

ஜியோ ஸ்டுடியோஸ், தேவ்கன் பிலிம்ஸ் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஷைத்தான்’ படத்தை அஜய் தேவ்கன், ஜோதி தேஷ்பாண்டே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Leave a Comment