விஜய் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என சொல்ல முடியாது.! – கனிமொழி பேட்டி.

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், பல ஆண்டுகளாகவே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் பல்வேறு சமயங்களில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். தன்னார்வ அமைப்பாக செயல்பட்டு வந்த இந்த இயக்கத்தை நேற்று அரசியல் கட்சியாக பதிவு செய்து தனது கட்சி பெயரையும் அது குறித்த அறிக்கையும் நடிகர் விஜய் வெளியிட்டார்.

“தமிழக வெற்றி கழகம்” என பெயரிடப்பட்டுள்ள தங்கள் கட்சியை விஜய் தரப்பினர் நேற்று டெல்லியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்தனர். விஜயின் அரசியல் வருகை பற்றி  பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் பலர் தங்கள் வாழ்த்துக்களை கூறி வரவேற்றனர்.

அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலை.? உளறிய திண்டுக்கல் சீனிவாசன்.!

நேற்று டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த திமுக எம்பி கனிமொழியும் விஜய் அரசியல் வருகை பற்றி  கருத்து தெரிவித்தார்.

விஜய் தான் வெளியிட்ட முதல் அரசியல் அறிக்கையில், தற்போதைய அரசியல் சூழல் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்ததே. நிர்வாக சீர்கேடுகள் மற்றும் “ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம்” ஒருபுறம் என்றால், நம் மக்களை சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்த துடிக்கும் “பிளவுவாத அரசியல் கலாச்சாரம்” மறுபுறம், என்று இருபுறமும் நம் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன. என குறிப்பிட்டு இருந்தார்.

விஜய் வெளியிட்ட இந்த கருத்து குறித்து, திமுக எம்பியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் கூறுகையில்,  நமது நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துமக்கள் தான். அந்த பெரும்பான்மையை பயன்படுத்தி கொண்டு அரசியல் செய்வோர் தான் அதற்கு எதிரானவர்கள், திமுக அரசு யாராக இருந்தாலும் எந்த பாகுபாடும் பார்த்து செயல்பட்ட்டதில்லை. அனைத்து பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள் நலனுக்காக தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார் .

மேலும், ஊழலுக்கு எதிரான அரசியல் என்று தான நாம் எல்லோரும் சொல்லி கொண்டு இருக்கிறோம். ஜனநாயகதில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் . 2026 சட்டசபை தேர்தலில் விஜயின் அரசியல் வருகை என்பது நிச்சயமாக திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. யாருடைய அரசியல் வருகையையும் எப்படி இருக்கும் என ஆருடம் சொல்லும் நிலையில் நான் இல்லை. அரசியல் களத்திற்கு வர வேண்டும் என வந்துள்ளார். அவர் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது என கூறினார் திமுக எம்பி கனிமொழி.

 

Leave a Comment