95 மருத்துவமனைகள்.. 750 படுக்கைகள் தயார்.! தீபாவளி முன்னெச்சரிக்கைகள்.. அமைச்சர் பேட்டி.! 

வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வர். இந்த பட்டாசு வெடிக்கும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

ஏற்கனவே, பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் சீன பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று அரசு முன்னெடுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம்..!

அவர் கூறுகையில்,”தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தமிழகத்தில் ஏற்படும் தீ விபத்துகளை குறைக்க, சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீ விபத்து நடந்தாலும், அதனை உடனே தடுக்க மீட்பு பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். மக்களை காப்பாற்ற, தமிழகம் முழுவதும், 95 மருத்துவமனைகளில், 750 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி தினத்தில் எந்தவித தீ விபத்து உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இந்த தீபாவளிக்கும் எந்தவித பெரிய தீ விபத்தும் ஏற்படக்கூடாது என மக்களை வலியுறுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.