ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு;காவல் அதிகாரிக்கு 22.6 ஆண்டுகள் சிறைத்தண்டனை…!

ஜார்ஜ் பிளாய்டை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மே 25 ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 48) என்ற கறுப்பினத்தவர், கள்ள நோட்டு வைத்திருந்ததாக கூறி அவரது கழுத்தில்  காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் முழங்காலை வைத்து அழுத்தினார்.இதனால் மூச்சுவிட முடியவில்லை என்று பிளாய்ட் கெஞ்சியும் அதிகாரி தனது காலை எடுக்கவில்லை.இதன்காரணமாக,மூச்சுத்திணறி பிளாய்ட் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,காவல்துறை அதிகாரி இனவெறியுடன் நடந்து கொண்டதாக பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்,பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது.

இதனைத் தொடர்ந்து,ஜார்ஜ் ஃபிளாய்ட் குடும்பத்தினர்,காவல்துறை அதிகாரி டெரெக் சாவின் உட்பட நான்கு பேர் மீது வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில்,இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க மினசோட்டா நீதிபதி பீட்டர் காஹில்,”ஜார்ஜ் ஃபிலாய்டின் கொலைக்காக காவல்துறை அதிகாரி டெரெக் சாவினுக்கு 22 ஆண்டுகள் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக,நீதிபதி கூறுகையில்:”இந்த தண்டனை உணர்ச்சி அல்லது பொதுக் கருத்தின் அடிப்படையில் அமைந்ததல்ல.ஃபிலாய்ட் குடும்பத்தினர் உணரும் ஆழ்ந்த மற்றும் மிகுந்த வேதனை புரிகிறது. அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரி சாவின் தனது நம்பிக்கை,அதிகாரத்தின் நிலையை துஷ்பிரயோகம் செய்தார் மற்றும் பிளாய்டை கொடுமையுடனும், மரியாதை இல்லாமலும் நடத்தினார், மேலும் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்க வேண்டிய கண்ணியத்தை அவருக்கு கொடுக்க மறுத்தார்.

எனவே,கொலை குற்றமும், பிற குற்றங்களும் சுமத்தப்பட்ட சாவின் தனது வாழ்நாள் முழுவதும் துப்பாக்கியை வைத்திருப்பதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும்,45 வயதான சாவின் சிறையில் கண்ணியமாக நடந்து கொண்டால், தனது மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்தபின் பரோலில் விடுவிக்கப்படுவார்”,என்று தெரிவித்தார்.

 

Recent Posts

கண்டிப்பா மாற்றம் இருக்கு… வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்தேன் – பிரகாஷ் ராஜ்

Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…

24 mins ago

42-வது ஐபிஎல் போட்டி .. கொல்கத்தா – பஞ்சாப் இன்று பலப்பரீட்சை !

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…

51 mins ago

சுட்டெரிக்கும் வெயில்…பொதுமக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்.!

MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…

1 hour ago

இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரி ரத்து செய்யப்பட்டது – பிரதமர் மோடி விமர்சனம்!

PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…

2 hours ago

தான்சானியாவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 155 பேர் பலி.!

East Africa: தான்சானியா நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 155 பேர் உயிரிழந்துள்ளனர், 236 பேர் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கனமழையைத்…

2 hours ago

13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்.!

Elections 2024: மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்டமாக கர்நாடகா, கேரளா,…

2 hours ago