இந்தியாவில் 57 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எத்தனை பேர்?

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 89,688 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,152 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 5,730,184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில்91,173  பேர் உயிரிழந்துள்ளனர். 4,671,850 பேர் குணமடைந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 967,161 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.