இந்தியாவில் ஜனநாயகம் இல்லை… ரயில் டிக்கெட் கூட எடுக்க முடியவில்லை… ராகுல் காட்டம்.! 

Rahul Gandhi : நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளது மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.

Read More – இந்திய பகுதிகளை உரிமை கொண்டாடும் சீனா.! எதிர்ப்பு காட்டும் அமெரிக்கா

இந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி , கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, தேசிய அளவில் முதன்மை எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் மீது திட்டமிட்டு நிதி ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Read More – 3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் கல்லா கட்டிய ரயில்வேத் துறை.! எப்படி தெரியுமா.?

இது ஜனநாயக விரோதம். இதில் எங்கு இருக்கிறது ஜனநாயகம். நாங்கள் பொது மக்களிடம் பெற்ற நிதியை வருமானவரித்துறையினர் முடக்கியுள்ளார்.  ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கை முடக்கிவிட்டால் அந்த குடும்பம் வறுமையால் தள்ளாடும். ஒரு நிறுவனத்தின் வங்கி கணக்கை முடக்கிவிட்டால் அந்த நிறுவனம் அதளபாதாளத்துக்கு சென்றுவிடும். அதுபோல தான் பிரதான கட்சியாக எங்கள் வங்கி கணக்கை முடக்கி எங்களை நகர விடாமல் செய்கிறர்கள்.

Read More – பெண்களே….இலவசமாக தையல் மிஷின் வேண்டுமா? அப்போ இத பற்றி தெரிஞ்சிக்கோங்க.!

எங்கள் கட்சி ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியவில்லை. விளம்பரம் கொடுக்க முடியவில்லை. எங்கள் வேட்பாளர்களுக்கு ரயில்டிக்கெட் கூட வாங்க முடியவில்லை. எந்த நீதிமன்றமும் இதுவரை எதுவும் சொல்லவில்லை. தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்கிறது. வேறு எந்த அமைப்பும் இன்னும் எதுவும் சொல்லவில்லை. ஊடகங்கள் கூட எதுவும் சொல்லவில்லை என தனது ஆதங்கத்தை செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பதிவு செய்தார்.