வழிநெடுக இசைக் கச்சேரி! அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜா அடுத்த இசைக் கச்சேரிக்கான அப்டேட் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைப்பது குறைந்துள்ளது என்றாலும் அடிக்கடி சில இடங்களில் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வெளி மாவட்டத்தில் இசைகச்சேரி நடத்தினார்.
ஜனவரி 17-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் அண்ணாமலை நகர், முத்து ரோடு பகுதியில் இளையராஜாவின் இசைக்கச்சேரி பிரமாண்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 20,000 மக்கள் அங்கு வருகை தந்திருந்தார்கள். அங்கு வந்தவர்களுக்கு மனதிற்கு நெருக்கமான பாடல்களை பாடி இளையராஜாவும் ரசிகர்களை இசை மழையில் நனையவைத்தார்.
நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது! நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..? எனவும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் கேள்விகளை எழுப்பி இருந்தார். பலரும் தங்களுடைய ஊருக்கு வாருங்கள் என கூறி வந்தனர்.
இதனை தொடர்ந்து அடுத்ததடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை இளையராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி, சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்… உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்! தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்துள்ளார். எனவே, விரைவில் அவர் அறிவித்துள்ள மாவட்டங்களில் எந்த தேதிகளில் இசைக்கச்சேரி நடைபெறும் என்கிற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்… உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்!
தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.— Ilaiyaraaja (@ilaiyaraaja) January 20, 2025
மேலும், வரும் மார்ச் 8-ஆம் தேதி லண்டன் ஈவென்டிம் அப்பல்லோ அரங்கிலும் இளையராஜாவின் இசைக்கச்சேரி ஒன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் புக்கிங் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.