வெகு சிறப்பாக கொண்டாட தொடங்கிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் .!

  • கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம்,  கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என தற்போது கொண்டாட்டங்களை மக்கள் தொடங்கி விட்டனர்.
  • பொது இடங்கள் , வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் அதிக செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ளனர் .

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக உலகம் முழுவதும் ஏற்பாடுகள் களை கட்டி வருகின்றனர் . கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதமாக  ஒவ்வொரு வீட்டிலும் கண்ணைக் கவரும் விதமாக  நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், போன்றவை வைத்து அலங்கரிக்க தொடங்கி விட்டனர்.

மேலும் கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கிறிஸ்து பிறப்பு வாழ்த்து பாடல்கள் என தற்போது கொண்டாட்டங்களை மக்கள் தொடங்கி விட்டனர். தமிழகத்தில் உள்ள  ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் வீட்டிற்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாட தொடங்கி உள்ளனர்.

அதிலும் குறிப்பாக பொது இடங்கள் , வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் அதிக செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தொடங்கி உள்ளனர் .இதுமட்டுமல்லாமல் வீடுகளில் சிறு சிறு குடில்கள் அமைத்து வருகின்றனர்.

இதற்குத் தேவையான தருவைப் புற்களை மலையோரப் பகுதிகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் சென்று சேகரித்து வருகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து அதில் மின் விளக்குகளாலும் , கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பலூன்களை தொங்க விட்டு அலங்கரித்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் வெகு சிறப்பாக  கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் ஜவுளி கடைக்கு புதிய ஆடைகளையும் வாங்க தொடங்கி விட்டனர்.கிறிஸ்தவ ஆலயங்களுக்கு  வண்ணம்  பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் என தேவாலயங்கள் அலங்கரித்து வருகின்றனர்.

Recent Posts

விந்தணுக்களின் வளர்ச்சி மற்றும் கருவுறுதலுக்கு.. X குரோமோசோம் மரபணு அவசியம் – புதிய ஆய்வு!

சென்னை: ஒரு புதிய ஆய்வில், X குரோமோசோம் மரபணு விந்தணுக்களின் வளர்ச்சிக்கும் ஆண்களின் கருவுறுதலுக்கும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட CSIR-Centre for Cellular…

15 mins ago

எப்பா .. இதுலாம் செஞ்சாதான் ஆர்சிபி பிளே ஆஃப் வர முடியுமா ? குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் !

சென்னை : ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு இது வரை 3 அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் 4-வது அணிக்காக பெங்களூரு அணியும், சென்னை அணியும் நாளைய நாளில்…

21 mins ago

272 சீட்… தேர்தலில் தோற்றால் பாஜகவின் பிளான் ‘பி’ என்ன.? அமித்ஷா பதில்.!

சென்னை: பாஜகவுக்கு 272 எனும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அக்கட்சியின் பிளான் பி என்ன என்ற கேள்விக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாட்டில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கான…

26 mins ago

இன்று மும்பை லக்னோ மோதல்! கம்பேக் கொடுப்பாரா ரோஹித் சர்மா?

சென்னை : இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகிறது. ஐபிஎல் 2024 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17…

44 mins ago

யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல்.! கோவை நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: யூ-டியூபர் பெலிக்ஸிற்கு மே 31ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதித்தது கோவை நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர்…

56 mins ago

‘இதுதான் டைம் .. கரெக்ட்டா செஞ்சா உலகமே உன்ன மறக்காது’ !! சேட்டனுக்கு அட்வைஸ் கொடுத்த கம்பிர் !

சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…

1 hour ago