ஒரு வழியாக கிறிஸ்துமஸ் தினத்தன்று மகளின் முகத்தை காட்டிய ஆலியா பட் – ரன்பீர் கபூர் தம்பதி.!

Alia Bhatt, Ranbir Kapoor

பிரபல பாலிவுட் ஜோடிகளான ரன்பீர்-ஆலியா பட் தம்பதி, தங்களது மகளை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளனர். இந்தி சினிமா பிரபலங்களான இருவரும் 2022 ஏப்ரல் 14ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதை தொடர்ந்து, அவர்களுக்கு இருவருக்கும் பிறந்த பெண் குழந்தையை, ஓராண்டுக்கு மேலாக வெளி உலகிற்கு காட்டாமல் இருந்தனர். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று, தங்களது மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது. நவம்பர் 6 அன்று ராஹாவின் முதல் … Read more

கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனை…பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து!

pm modi - X MAS

கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (இன்று) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வரிசையில், இதற்கு முன்னதாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஓ பன்னீர்செல்வம், டி. டி. வி. தினகரன், விஜயகாந்த், ஆகியோர் தங்கள் … Read more

கிறிஸ்துமஸ் 2023: அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து செய்தி.!

Christmas 2023

கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) உலகமெங்கும் கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பலரும் தங்களது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அரசியல் பிரமுகர்கள் பலரும் தங்கள் வாழ்த்து செய்திகளை பகிர்ந்து கொண்டனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  திராவிட மாடல் அரசில் கிறிஸ்தவ மக்களுக்கு எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

கிறிஸ்துமஸ் அன்று இதனை செய்தால் கைது – காவல்துறை எச்சரிக்கை!

tn police fine

கிறிஸ்துமஸ் (Christmas) என்பது ஆண்டுதோறும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கக் கொண்டாடப்படும் விழாவாகும். இந்த விழா வருகின்ற 25-ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டப்படுகிறது.  இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 8000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். அதன்படி, கிறிஸ்துவ தேவாலயங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், கன்னியாகுமரி … Read more

காத்திருந்த ஆளுநர் தமிழிசை.! விறுவிறுவென புறப்பட்டு சென்ற முதல்வர் ரங்கசாமி.!

ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல்வர் ரங்கசாமி இரண்டரை மணிநேரம் தாமதமாகதான் வந்தாராம்.  புதுச்சேரி அரசு சார்பில் ஆளுநர் மாளிகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சுமார் இரண்டரை மணிநேரம் முதல்வர் வருகைக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை அடுத்து முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகைக்கு விரைந்துள்ளார். முதலில் … Read more

மக்களவை குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.!

மக்களவை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  மக்களவை கூட்டத்தொடர், அடுத்த வாரம் நிறைவடைய இருந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்னதாக இன்று அலுவல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள், கிறிஸ்த்துமஸ் – புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு முன்கூட்டியே விடுமுறை அளிக்க கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது மக்களவை தேதி குறிப்பிடாமல் தற்போது முடித்துவைக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ் – 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல 600 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாளை முதல் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து நாளை 300 சிறப்பு பேருந்துகளும், நாளை மறுநாள் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்ட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை வருவதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! இயேசு பிறந்த தினமும், வரலாறும்..!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, உலகெங்கும் உள்ள பில்லியன் கணக்கான மக்களால் கிறிஸ்துமஸ் தினமாக, மத மற்றும் கலாச்சாரம் தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் தினம் பொது விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது. குழந்தை இயேசு பிறந்த இடம்:                          … Read more

டிசம்பர் 26 அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை.! மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!

மேற்கு வங்கத்தில் கிறுஸ்துமஸிற்கு அடுத்த நாள் டிசம்பர் 26 திங்கள் அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையானது டிசம்பர் 25 ஞாயிற்று கிழமை வருகிறது. ஆதலால் இதற்கு அடுத்த நாள் திங்கள் கிழமையான டிசம்பர் 26 அன்று விடுமுறை என மேற்கு வங்க அரசு சர்பிரைஸ் செய்தியை வெளியிட்டுள்ளது. அதன்படி, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாளான டிசம்பர் 26-ம் தேதியை அரசு விடுமுறையாக மேற்கு வங்க அரசு … Read more

கிறிஸ்துமஸ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஆவினில் அறிமுகமாகும் புதிய வகை கேக்குகள்..!

ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை அறிமுகம் செய்கிறது.  ஆவின் நிர்வாகம் பண்டிகை நாட்களில் புதியவகை உணவு பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நெருங்கி வரும் நிலையில் புதிய வகை சுவீட்டை அறிமுகம் செய்கிறது. அதன்படி, ஆவின் நிர்வாகம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டி ஃபிளம், வெண்ணிலா, சாக்லேட் என 4 வகைகளில் கேக்குகளை விற்பனைக்கு கொண்டு வருகிறது.  மேலும், … Read more