#IPL2024 :சென்னை அணிக்கு புதிய ஸ்பான்சர் யார் தெரியுமா..? அதிகாரபூர்வ ஜெர்சி வெளியானது..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்  ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடருக்கு  நாடு கடந்த கிரிக்கெட் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொடரை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்  2024 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் சமீபத்தில் தான் நடப்பு  ஐபிஎல் தொடருக்கான  மினி ஏலம் துபாயில் நடந்து முடிந்தது.

U19 Semi-Final2: பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி

ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ஏலத்தில் 3 வெளிநாட்டு வீரர்களையும், 3 உள்நாட்டு வீரர்களையும் ஏலத்தில் எடுத்துள்ளது. அதில் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடிக்கும்,  டேரில் மிட்செலை 14 கோடிக்கும், சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கும், முஷ்பிகுர் ரஹ்மானை 2 கோடிக்கும், ஷர்தூல் தாகூரை 4 கோடிக்கும், அவனிஷ் ராவ் ஆரவல்லியை 20 லட்சதிற்கும் வாங்கியுள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இது வரை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரே தோனியின் கடைசி தொடராக இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், தோனி இன்னும் சில தொடரில் விளையாட வேண்டும் என  ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வந்தது. ஆனால் தற்போது சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான நிறுவனமான “எதிஹாட்  ஏர்வேஸ் நிறுவனம் (ETIHAD)” நடப்பு தொடரில் உள்ளது. 

இதற்கான ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளனர். இந்த புதிய ஜெர்சி சிஎஸ்கே ரசிகர்களிடேயே வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment