8 வழி சாலை வழக்கு: இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில்  சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.  

கடந்த ஆண்டு  பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி மத்திய அரசின் பாரத்மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் சுமார் ரூ 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டமானது சுமுார் 277.3 கி.மீ. தூரத்திற்கு பசுமை வழிச்சாலை அமைப்பது தான்.

இந்த சாலை சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து சேலம் அருகே உள்ள அரியானூர் வரை இந்த சாலை போடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 59.1 கி.மீ. பகுதியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 123.9 கி.மீ. பகுதியிலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 கிமீ பகுதியிலும், தருமபுரி மாவட்டத்தில் 56 கிமீ. பகுதியிலும், சேலம் மாவட்த்தில் 36.3 கி.மீ. பகுதி என மொத்தம் 277.3 கி.மீ பகுதியில் இந்த சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த சாலை அமைக்கும் பணிக்கு ஏராளமான விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன.இதனால் இந்த சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.அரசும் காவல்துறையை வைத்து கடுமையான ஒடுக்குமுறையில் ஈடுபடடன.இந்த சூழலில் மக்கள் , கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தின.போராட்டத்தையும் ஒடுக்கும் விதமாக தமிழக அரசாங்கம் கைது நடவடிக்கைகளை தொடர்ந்தது.

இந்நிலையில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து நில உரிமையாளர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில்  இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி)சென்னை- சேலம் 8 வழி சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

கல்குவாரியில் வெடி விபத்து – குவாரி நிர்வாகம் ரூ.12 லட்சம் நிவாரணம்!

Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…

2 mins ago

502 Error.! திணறிய கூகுள்… பயனர்கள் அதிருப்தி.!

Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…

33 mins ago

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

37 mins ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

58 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

1 hour ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

2 hours ago