மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதும் மீண்டுள்ளது.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.!

மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. – முதல்வர் ஸ்டாலின் பேட்டி. 

வங்கக்கடலில் உருவாகியிருந்த மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. மாமல்லபுரத்தில் கரையை கடக்கையில் புயல் காற்று வீசியதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன.

புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல்  400க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மேலும், பல இடங்கள் புயலால் சேதமடைந்துள்ளது.

சேதமடைந்த சென்னை பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், ‘ புயல், மழை பாதிப்புகளை அகற்ற பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி. மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால் தான் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும். என முதல்வர் உறுதியளித்தார்.

மேலும், இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் சீராக வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Comment