இன்று சுகாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை..!

கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஓமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.