ஆளுநர் ரவி ஒரு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் போல செயல்படுகிறார்.! அமைச்சர் பொன்முடி குற்றசாட்டு.!

ஆளுநர் ரவியின் செயல்பாடு குறித்தும், தமிழக பாஜக செயல்பாடு குறித்தும் தனது கண்டன அறிக்கையை தமிழக அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ளார்.  தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் குறித்து தனது கண்டன அறிக்கையை நேற்று வெளியிட்டு உள்ளார். அதில், பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு அதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்து உள்ளார். கார்ல் மார்க்ஸ் : ஆளுநர் ரவி அண்மையில் ஒரு விழாவில் பேசுகையில், கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியிருந்தார். கால் … Read more

மாணவர்கள் கவனத்திற்கு..! இந்த செயலி உங்களுக்காக தான்..!

அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நோக்கம் என்ற செயலி அறிமுகம்.  தமிழ்நாடு அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களுக்குப் பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. கால மாற்றத்திற்கேற்ப பயிற்சிகளின் தன்மையை விரிவுபடுத்தவும், தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அது சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் இக்கல்லூரி AIM TN என்றழைக்கப்படும் காணொலிப்பாதை (YouTube channel) ஒன்றை ஆரம்பித்து அதில் பயிற்சிக் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வருகிறது. … Read more

திமுக தோல்வி பயத்தில் உள்ளது.! தேர்தல் பரப்புரையில் கல்வீச்சு மோதல் குறித்து சீமான் விமர்சனம்.!

நேற்று ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரத்தில் நடந்த கல்வீச்சு தாக்குதல் குறித்து சீமான் கூறுகையில், திமுக தோல்வி பயத்தில் இவ்வாறு செய்கிறது என குற்றம் சாட்டினார்.  நேற்று மாலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையின் போது நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இந்த சம்பவமானது ஈரோடு கிழக்கு வீரப்பன்சத்திரம் பகுதி அருகே காவிரி சாலையில் நடைபெற்றது. தாக்குதல் வழக்குப்பதிவு : திமுக மற்றும் … Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே கல்வீச்சு தாக்குதல்.! காவல்துறை வழக்குகபதிவு.!

ஈரோடு கிழக்கு தொகுதி கிடைத்தேர்தல் பரப்புரையில் நேற்று இரவு திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக கட்சி தலைவர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இதனால் இடைத்தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. கல்வீச்சு : நேற்று இரவு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஈரோடு கிழக்கு வீரப்பன் சத்திரம் அருகே காவிரி சாலையில் பரப்புரை … Read more

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச் 8ல் வெளியீடு!

தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச் 8ம் தேதி வெளியிடப்படும் என தகவல். தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை மார்ச் 8ல் வெளியிடப்படுகிறது. கண்ணியம் காத்தல், சமுதாயத்தில் மேலான நிலையை அடைய மாநில மகளிர் கொள்கை வழிவகுக்கும். அரசியலில் வாய்ப்பு பெறவும், தயார்படுத்துவதற்கும், உரிமை பெற்று தரவும் மாநில மகளிர் கொள்கை வழிவகுக்கும் என கூறப்படுகிறது. மகளிரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், கண்காணிக்கவும் மாநில மகளிர் க்கொள்கை வழிவகுக்கும். பெண்களுக்கான மாநிலக் கொள்கையை சமூகநலத் துறை விரைவில் … Read more

#BREAKING: சர்ச்சை பேச்சு – சீமான் மீது வழக்குப்பதிவு!

பரப்புரை கூட்டத்தில் சர்ச்சையாக பேசியதாக சீமான் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை. சீமான் மீது வழக்குப்பதிவு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தில் அருந்ததியினர் சமுகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டியலின அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீசார் நடவடிக்கை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி … Read more

ஆசிரம விவகாரம் – விழுப்புரம் ஆட்சியர், எஸ்பி அறிக்கை தர உத்தரவு!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் விளக்கம் கேட்டது மனித உரிமை ஆணையம்.  விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், எஸ்பி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பத்திரிகை செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணையம், ஆசிரம விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி ஆணையிட்டுள்ளது. விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்கிறது … Read more

#BREAKING: இடைத்தேர்தல் – தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது!

இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் … Read more

ஏடிஎம் கொள்ளை – 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல். ஏடிஎம் கொள்ளை: கடந்த வாரம் திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஏடிஎம் கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் தப்பி சென்று அங்கிருந்து ஹரியானா சென்றது தெரியவந்தது. ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவர் கைது: கைது செய்யப்பட்ட 2 … Read more

தேர்தல் நடத்தும் அலுவலர் மீது இபிஎஸ் பரபரப்பு புகார்!

வாய்ஸ் நோட் பரப்புரைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்ததாக இபிஎஸ் தரப்பு குற்றசாட்டு. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாய்ஸ் நோட் முறையில் பரப்புரை செய்ய அனுமதி மறுப்பு என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புகார் அளித்துள்ளார். வாய்ஸ் நோட் பரப்புரைக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி மறுத்ததாக இபிஎஸ் தரப்பு குற்றசாட்டியுள்ளனர். இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியை சந்தித்து அதிமுக ஐடி பிரிவினர் புகார் மனு அளித்தனர். முன்பதிவு செய்த … Read more