காய்கறி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்..! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!

Anbumani Ramadoss

காய்கறி விலையை குறைக்க நடவடிக்கை தேவை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தக்காளி விலை இன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி,  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஒரே சீராக இருப்பதையும், உழவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதையும் உறுதி செய்ய … Read more

ஆளுநர் இதை அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் – சு.வெங்கடேசன் எம்.பி

M.P venkatesan Neet

பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.  ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று சேலம் மாவட்ட காவல்துறை … Read more

தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டெடுப்பு!

Minister Thangam Thennarasu

தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானையோடு ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.  துலுக்கர் பட்டியில் நடைபெற்றுவரும் அகழ்வாய்வில், தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த  பதிவில்,தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை வாயிலாக, திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர் பட்டியில் நடை பெற்று வரும் அகழ்வாய்வில், தமிழி எழுத்துக்களில் “புலி” என்று பொறிக்கப்பட்டுள்ள … Read more

நான் கூறிய கருத்து விஜய்க்கு எதிரானது அல்ல.! விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்.!

Thirumavalavan and Vijay

நடிகர் விஜயை மனதில் வைத்து நான் கருத்து கூறவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.  நடிகர் விஜய் அண்மையில் தமிழகத்தில் ஓவ்வொரு தொகுதியிலும் 12ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை , நினைவு பரிசு உள்ளிட்டவை வழங்கினார். அந்த சமயம் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில் சினிமாத்துறைனர் அரசியலுக்கு வருவது தமிழக அரசியலின் சாபக்கேடு என கடுமையாக விமர்சித்து இருந்தார். அந்த சமயம் இது விஜய்க்கு … Read more

கட்சி கட்டுப்பாட்டை மீறிய திருநெல்வவேலி எம்பி.? நோட்டீஸ் அனுப்பிய திமுக தலைமை.!

DMK MP Gnana Thiraviyam

கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி திருநெல்வேலி எம்பி ஞான திரவியத்துக்கு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி ஞான திரவியம் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும், அவபெயர் ஈடுபடுத்தும் விதமாகவும் செயல்பட்ட புகார் குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விளக்கம் அளிக்க தவறினால் … Read more

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ரத்தாகுமா.? உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை.!

MInister Senthil balaji

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ரத்து செய்யும் கோரிக்கையானது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அமலக்கத்துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அப்போது ஜூன் 28வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அவர் அப்போதே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதற்கிடையில், அமலாக்கத்துறையினர், தாங்கள் செந்தில் பாலாஜியை விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இருந்தனர். … Read more

தொழில் நிறுவனங்கள் நாள் விழா இன்று தொடக்கம்.!

Stalin Tncm p

பன்னாட்டு குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாடிட வேண்டும் என ஆணையிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை சென்னை வர்த்தக மையத்தில் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா நடைபெற உள்ளது. அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ், 100 பேருக்கு ரூ.18.94 கோடி மானிய … Read more

இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் அவர்களை அலைக்கழிப்பது ஏன்? – டிடிவி தினகரன்

TTV DHINAKARAN

போக்குவரத்துக்கழகங்களில் காலியாக உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணி இடங்களில் ஆட்களை நியமிக்க திமுக அரசு தயங்குவது ஏன்? என எழுப்பி அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  அந்த அறிக்கையில், தனியார் நிறுவனம் மூலம் சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் ஆட்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்து அதற்கான முயற்சிகள் கைவிடப்பட்ட நிலையில், அதற்கு மாறாக போக்குவரத்துக்கழகத்தில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த இப்போது முயற்சி மேற்கொள்வதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன. வயது முதிர்வு … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு..!

asiriyar k.veeramani

மகளிர் மீதான ஆண் ஆதிக்க சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத்தனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி என ஆசிரியர் கீ.வீரமணி கருத்து.  வெளிநாட்டில் வேலை செய்து வாங்கிய சொத்துக்களில் தனது மனைவிக்கு உரிமை இல்லை என்று கணவர்சென்னையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை  உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்தார். இந்த வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, இல்லத்தரசிகள் பணியை கணவனின் பணியோடு ஒப்பிட முடியாது. இல்லத்தரசிகளின் பணி 24 மணி நேர பணி … Read more

25-ஆவது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பார்வையிட்ட ஆளுநர் தமிழிசை..!

Tamilisai EB

பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என ஆளுநர் தமிழிசை ட்வீட். சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில், 25ஆவது வந்தே பாரத் ரயில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆளுநர் தமிழிசை அவர்கள் சென்னை ஐ சி எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 25-ஆவது வந்தே பாரத் அதிவிரைவு ரயிலை பார்வையிட்டார். பெரம்பூர் ஐசிஎப் ரயில்வே மேலாளர்,  அலுவலக பணியாளர்கள் மற்றும்  ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஆளுநர் தமிழிசை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து ஆளுநர் தமிழிசை தனது … Read more