Breaking:”நீட் விலக்கு மசோதா ,ஆளுநருக்கு அனுப்பப்பட்டது-அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்”..!

நேற்று பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ,ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தெரிவித்தார்.

மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. நீட் தேர்வால் பல நன்மைகள் உண்டு,மேலும்,கூட்டணி கட்சியின் முடிவு வேறு எங்களின் முடிவு வேறு என்று பாஜகவின் நயினார் நாகேந்திரன் பேசியதையடுத்து,பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.மேலும்,குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படும்.நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

10 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

13 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

13 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

41 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago