#BREAKING: திமுக உட்கட்சி தேர்தல்; முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட அமைப்பு தேர்தல் தொடர்பாக கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். திமுகவின் 15-வது உட்கட்சி தேர்தல் வரும் 22, 23, 24 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் 76 அமைப்பு மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக 72 மாவட்டங்களாக மறுசீரமைக்கப்பட்டு திமுக தேர்தல் நடக்கிறது.

திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 22-ஆம் தேதி தொடங்குகிறது. செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளார் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment