#BREAKING: அதிமுக பொதுக்குழு – தனி நீதிபதியின் உத்தரவு ரத்து!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அதிமுகவில் ஜூன் 23 – க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது எனவும் தனி நீதிபதி ஜெயசந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு வழங்கிய தீர்ப்பால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒற்றை தலைமை என்ற அதிமுகவின் நோக்கம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்தார்.

Leave a Comment