#BREAKING : அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாமுக்கு சிலை வைக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன்

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுக்கு சிலை வைக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு. 

சட்டப்பேரவையில் செய்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி,

  • சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமுக்கு சிலை வைக்கப்படும்.
  • ராணிமேரி கல்லூரியில் ரவீந்திரநாத் தாகூருக்கு சிலை வைக்கப்படும்.
  • அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு கடலூரில் சிலை அமைக்கப்படும்.
  • பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும்.
  • இதழியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு  ரூ.5 லட்சம் மற்றும் கலைஞர் எழுதுகோல் விருது  வழங்கப்படும்.
  • வீரபாண்டி கட்டபொம்மன் நினைவிடத்தில் அவரது பெருமைகளை காட்சிப்படுத்தும் வண்ணம் ஒளி – ஒலி அமைப்புகள் அமைக்கப்படும்.
  • இளம் பத்திரிக்கையாளர்களுக்கு, உயர்கல்வி பயில அரசு நிதியுதவி வழங்கும்.
  • பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நிதியானது ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும்.
  • மருது சகோதரர்களுக்கு சென்னை கிண்டி மண்டபத்தில் சிலை வைக்கப்படும்.
  • தாய்நாட்டின் விடுதலைக்காக போராடிய தியாகிகள், மொழிப்போர் தியாகிகள், தலைசிறந்த இலக்கியப் படைப்பாளிகள், சமூக நீதிக்காக போராடியவர்கள், திராவிட இயக்க முன்னோடிகள் ஆகியோர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் நிறுவப்படும்

உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.