#BREAKING: இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதாரம் நெருக்கடிக்கு அரசே காரணம் என கூறி, பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, சமீபத்தில் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று இருந்தார்.

இந்த நிலையில், இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். அதன்படி, துறைமுகங்கள் கப்பல்கள், விமான சேவைத்துறை அமைச்சராக நிமல் சிறிபால டிசில்வா பதவியேற்றார். கல்வித்துறை அமைச்சராக சுசில் பிரேமஜயந்த, சுகாதாரத்துறை அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்லவும் பதவியேற்றுக்கொண்டனர்.

மேலும், விஜேதாச ராஜபக்ச நீதித்துறை அமைச்சராகவும், ஹரீன் பெர்ணாண்டோ சுற்றுலாத்துறை அமைச்சராகவும், ரமேஷ் பத்திரன, மனுஷ நாணயக்கார, நளின்  பெர்ணாண்டோ, டிரான் அலஸ் ஆகியோரும் இலங்கையின் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். ஏற்கனவே, 4 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், மேலும் தற்போது 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

Leave a Comment