எல்லை விவகாரம் : இன்று இந்தியா – சீன ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை.!

இன்று இந்தியா, சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

லடாக் எல்லையினல் இந்திய-சீன வீரர்கள் இடையே கடந்த மாதம் 15-ஆம் தேதி நடந்த மோதலில்  இந்திய தரப்பில் 20 ராணுவ வீரா்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 ராணுவ வீரா்கள் கொல்லப்பட்டதாக  கூறப்பட்டது. இதனை, இதுவரை  சீன அதிகாரப்பூா்வமாக அறிவிக்கவில்லை.

இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் இந்திய-சீனப் படைகள்  குவிக்கப்பட்டன. இதனால், பதற்றம் நிலவியது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.  இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு நாட்டு  தூதரக அளவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் முடிவில்,  பிரச்னைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து சீன ராணுவம் தனது படைகளை திரும்பப் பெறத் தொடங்கியது.

கடந்த திங்கள்கிழமை ரோந்து புள்ளி 15 -யில் இருந்து  ராணுவ முகாம்கள் போன்றவற்றை  சீன ராணுவம் அப்புறப்படுத்தி  பின்வாங்கியது. சமீபத்தில் இருநாட்டு ராணுவமும் எல்லையில் தங்கள் படைகளை விலகி கொண்டது. இரு நாடும் படைகளை விலகி கொண்டதால் சற்று பதற்றம் குறைந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளது. ராணுவ தரப்பில் நடப்பது இது நான்காம் பேச்சுவார்தை என்பது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

‘அவுட் இல்லனாலும் .. அது தோல்வி தான்’ ! டிஆர்எஸ் விதியை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா !

Akash Chopra : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி, ஹைத்ராபாத்திடம் தோல்வியடைந்தது அதற்கு முக்கிய காரணமாக இந்த டிஆர்எஸ் அமைந்ததால்…

2 mins ago

தோல்வி பயத்தால் ரேபரேலியில் களமிறங்கும் ராகுல் காந்தி.! பிரதமர் மோடி விமர்சனம்.!

Election2024 : தோல்வி பயத்தில் ரேபரேலியில் ராகுல் போட்டியிடுகிறார் என பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் இன்று ஓர் முக்கிய நிகழ்வு அரங்கேறியது.…

15 mins ago

மகாராஷ்டிராவில் கட்டுப்பாட்டை இழந்த பிரச்சார ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.!

Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…

57 mins ago

ரேபரேலி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.!

Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…

1 hour ago

சுவிட்சர்லாந்த்தில் அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம் ! புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக அடுத்த நடவடிக்கை!

Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…

2 hours ago

எல்லா புகழும் புவனேஷ்வர் குமாருக்கு தான்! புகழ்ந்து தள்ளிய முகமது கைஃப்!

Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …

2 hours ago