இந்த ஆண்டின் இறுதியில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை ..!! எங்கு, எப்போது தெரியுமா ..?

Border–Gavaskar Trophy : இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் தொடரை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதில் அதிக முறை இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2022-2023 ஆண்டில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் தொடரை வென்று கோப்பையையும் வென்றது இந்தியா அணி.

இதை தொடர்ந்து, இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள இந்த தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக நடைபெற உள்ளது. இந்த 5 டெஸ்ட் போட்டிகளும் எங்கு, எந்த மைதானத்தில் விளையாட போகிறார்கள் என்பதை தற்போது ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தொடரின் முதல் ஆட்டம் பெர்த் மைதானத்தில் நவம்பர் 22ம் தேதி தொடங்குகிறது. அதன்பின் 2-வது போட்டி பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது. 3-வது போட்டி டிசம்பர் 14ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்திலும், அதனை தொடர்ந்து 4-வது போட்டி டிசம்பர் 26ம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்திலும், இறுதியாக 5-வது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி சிட்னி மைதானத்திலும் நடைபெற உள்ளது.