இந்த ஆண்டின் இறுதியில் பார்டர்-கவாஸ்கர் கோப்பை ..!! எங்கு, எப்போது தெரியுமா ..?

Border-Gavaskar Trophy [file image]

Border–Gavaskar Trophy : இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான பார்டர்-கவாஸ்கர் தொடரை விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணையை தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் என அறிவித்துள்ளனர். இதில் அதிக முறை இந்தியா அணியே வெற்றி பெற்றுள்ளது. … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகினார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 3 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் 4 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்ததால் தற்போது இரு அணிகளும் சமமான புள்ளிகளுடன் உள்ளன. இதற்கு முன் நடைபெற்ற 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, … Read more

பாக்ஸிங் டே போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது வெற்றி இது.!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 8 பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ள இந்தியா 2 போட்டிகளில் வென்றுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இதனால், நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது. இதன் மூலம், 2020-இல் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், மெல்போர்னில் பாக்சிங் டே டெஸ்ட் … Read more

இது சாதாரண சதம் அல்ல! ரஹானேவை புகழ்ந்து தள்ளிய ஷேன் வார்ன்!

உலகத் தரமான பந்துவீச்சு, ஆடுகளத்தின் தன்மை, ஆட்டத்தின் போக்கு, என அனைத்துடனும் மோதி பதிவு செய்துள்ள சதம் இது – ஷேன் வார்ன் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 195 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி சார்பில் பும்ரா 4 , அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 , ஜடேஜா ஒரு … Read more

5 ஓவரில் 3 மெய்டன் 5 விக்கெட்டை வீழ்த்திய ஜோஷ் ஹேசில்வுட்.!

டெஸ்டில் மிக குறைந்த ரன்னில் சுருண்ட இந்தியா அணி 90 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா அணி. ஜோஷ் ஹேசில்வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.  அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 244 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4, பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய … Read more

சுருண்டது ஆஸ்திரேலியா.,மிரட்டியது இந்தியா.! 2nd இன்னிங்ஸ் ஆரம்பம்.!

அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து, 233 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய அனைத்து விக்கெட்டையும் … Read more

#AusvsInd: நிதானமான ஆட்டத்தால் அரை சதத்தை அடித்த விராட்.! ஆனால் அவுட்.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது அரை அரை சத்தத்தை அடித்து ரன் அவுட் ஆனார் கோலி. அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, விளையாடி வருகிறது. தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா 0, மாயங்க் அகர்வால் 17 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் சேடேஷ்வர் புஜாராவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை … Read more

#AusvsInd: இரண்டு விக்கெட்டை இழந்து தடுமாறும் இந்தியா.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரனா பிரித்வி ஷாவை தொடர்ந்து மாயங்க் அகர்வாலும் 17 ரன்களில் அவுட் ஆனார்.  இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து, தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா, மாயங்க் அகர்வால் களமிறங்கினர். பிரித்வி ஷா 2 பந்துகள் விளையாடி ரன் ஏதும் அடிக்காமல் … Read more

#AusvsInd: முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா.!

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா, ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றியதை அடுத்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் … Read more

சத்தம் போடாமல் ரோஹித் சாதனையை சமன் செய்த கோலி.!

சர்வதேச டி20 போட்டிகளில் அதிகம் அரைசதமடித்த ரோஹித் சர்மாவின் சாதனையை கேப்டன் விராட் கோலி சத்தம் போடாமல் சமன் செய்துள்ளார்.  சிட்னியில் இன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து, 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் … Read more