Categories: Uncategory

நம் உடம்பில் ஐஸ் கட்டியால் ஏற்ப்படும் நன்மைகள்!

சிறுவயதில் ஐஸ்கட்டியை தொட்டாலே பலரும் திட்டுவார்கள். இதனை சாப்பிடக்கூடாது காய்ச்சல் வரும் என்றும் பயமுறுத்துவார்கள்.
அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது ஐஸ்கட்டியை மீண்டும் எடுங்கள், சாப்பிட அல்ல உங்களது சருமத்தை பாதுக்காக்க ஐஸ்கட்டியை கொண்டு சருமத்தை எப்படியெல்லாம் பாதுகாக்கலாம். அவை என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.வீட்டில் கிடைக்கும் எளிதாக் கிடைக்கும் பொருளைக்கொண்டு உங்களின் அழகை மெருகூட்ட சூப்பர் டிப்ஸ்

நாள் பூராவும் வெளியில் வெயிலில் அலைந்து திரிந்து கொண்டிருப்பவர்கள் உடனடியாக முகத்தை பொலிவாக காட்ட வேண்டுமென்றால் ஐஸ் க்யூப் பயன்படுத்தலாம்.
ஐஸ் க்யூப்பை கையில் எடுத்து முகத்தில் வட்டவடிவமாக தேய்த்திடுங்கள்.பெரிய வட்டத்திலிருந்து ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக சிறிதாக வர வேண்டும். இவை சருமத்துளைகளில் உள்ள அழுக்களை நீங்கச் செய்வதால்.

வெயில் காலங்களில் மேக்கப் போட்டால் சிறிது நேரத்துலேயே வியர்த்து மேக்கப் கலைந்திடும். இவற்றை தவிர்க்க மேக்கப் போடுவதற்கு முன்னதாக ஐஸ் க்யூபைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்திடுங்கள். இப்படிச் செய்வதால் மேக்கப் நீண்ட நேரம் இருக்கும்.
முகத்திற்கு ஐஸ் பேக் போடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் சருமம் பொலிவாக காணப்படும்.ஐஸ் பேக் போட முடியாதவர்கள் குளிர்ந்த நீரில் முகம் கழுவலாம்.

இளம்பெண்களின் முக்கிய அழகுத் தேடல்களில் ஒன்று முகத்தில் தோன்றும் பருவை எப்படி விரட்டுவது என்பது தான். இவர்களுக்கு ஐஸ் க்யூப் மிகச்சிறந்த நிவாரணி.

நன்மைகள்:

ஐஸ் க்யூபை முகத்தில் தேய்ப்பதால், சருமத்துளைகள் விரிவடைந்து அழுக்குகள் வெளியேறும். இதனால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றாது.பருக்களையும் குறைத்திடும்.

அதிக எண்ணெய்ப் பசையுள்ள சருமம் உள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்படும்.இதனால் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.

சூரிய ஒளியினால் சருமம் கருப்பாகும். சில நேரங்களில் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றையும் ஏற்படுத்திடும். உடனடி தீர்வு வேண்டுமென்றால் மெல்லிய காட்டன் துணியில் மூன்று ஐஸ் க்யூபினை சேர்த்து கட்டி அவற்றைக் கொண்டு எரிச்சல் உள்ள இடங்களில் தேய்த்திடுங்கள்.
கழுத்துப்புகுதியில்,கண்களின் ஓரத்தில், நெற்றியில் என முகத்தில் பல இடங்களில் சுருக்கங்கள் தோன்றும். இவை ஏற்படாமல் இருக்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்திடுங்கள்.தினமும் இப்படிச் செய்து வருவதால் சருமம் பொலிவாவதுடன் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது தூக்கமின்றி , அதிக தூக்கம் போன்ற காரணத்தால் கண்கள் வீங்கியிருந்தால் இதனை முயற்சிக்கலாம்.
க்ரீன் டீ பேக் கியூப் ட்ரேயில் வைத்து தண்ணீர் ஊற்றிடுங்கள். அவை கட்டியானதும் க்ரீன் டீ க்யூப் எடுத்து கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்.

சருமத்தில் தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது சருமத்தில் போதிய அளவு தண்ணீர் சத்து இல்லாமல் வறட்சி ஏற்படுவது தான். இதனைத் தவிர்க்க ஐஸ் க்யூப் மசாஜ் செய்யலாம்.
இவை முகத்தில் உள்ள திசுக்களை சுறுசுறுப்பாக்கும். அதோடு சருமத்தில் உள்ள டெட் செல்களையும் உடனடியாக நீக்கிடும் என்பதால் சருமம் மிகவும் பொலிவாக காணப்படும்.

Recent Posts

IPL2024: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சென்ற பெங்களூர்..!

IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…

7 hours ago

ஜம்மு காஷ்மீரில் கணவன் – மனைவி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு.!

சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…

7 hours ago

பை பை ஐபிஎல் ..! இறுதி போட்டிக்கு முன் நியூயார்க் பறக்கும் இந்திய அணி வீரர்கள் !!

சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…

13 hours ago

கனமழை எதிரொலி: சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள்!

சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…

13 hours ago

நாங்கள் பாஜக அலுவலகம் வருகிறோம்… கைது செய்துகொள்ளுங்கள்… கெஜ்ரிவால் பரபரப்பு.!

சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…

13 hours ago

10.57 வர டைம் இருக்கு .. மழை பெய்யுமா? பெய்தால் எப்படி ஓவர் குறைப்பாங்கனு தெரியுமா ?

சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…

14 hours ago