கடந்த முறை நடத்த வன்முறை பாஜகவின் சோதனை முயற்சி.! முதல்வர் அசோக் கெலாட் கடும் விமர்சனம்.!

ஜாதி – மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த பாஜக திட்டம் தீட்டுகிறது. என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் விமர்சனம் செய்துள்ளார். 

மதம் மற்றும் ஜாதி அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜகவின் திட்டம் எனவும், அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த மாதம் ராஜஸ்தான், கரௌலியில் நடந்த வன்முறை சம்பவமானது பாஜகவின் சோதனை முயற்சி என்றும் முதல்வர் விமர்சித்தார்.

கடந்த, ஏப்ரல் 2 ஆம் தேதி கரௌலியில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதி வழியாக இந்து அமைப்புகளால் பைக் பேரணி நடத்தப்பட்டது. அப்போது, ஒரு சிலர் கற்களை வீசியதால் மதக்கலவர பதற்றம் ஏற்பட்டது. கரௌலியில் நடந்தது பாஜகவின் சோதனை முயற்சி தான் அதனை, நாங்கள் கட்டுப்படுத்தினோம் என முதல்வர் குறிப்பிட்டார்.

ராம நவமி (மார்ச் 30 ) அன்று ஏழு மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்று அசோக் கெலாட்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வன்முறைக்கு வன்முறை பதில் அல்ல, “இந்த நாட்டை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக முடிவு செய்துள்ளன எனவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டில், வன்முறை மற்றும் அமைதியின்மை ஏற்படும் போது, அது வளர்ச்சியையும், ஆட்சியையும் வெகுவாக பாதிக்கும். என்றார்.

ராஜ்கரில் உள்ள 35 கவுன்சிலர்களில் 34 பேர் பாஜகவினர். அவர்கள் அங்கு பிரேரணையை உண்டாக்கி, கோயிலை இடித்தார்கள். அவர்கள் காங்கிரஸ் ஆட்சியினை சீர்குலைக்கவும், அவதூறு செய்யவும் மட்டுமேஇதில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் உண்மையை ஆதரிக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் (பாஜக) பாடம் கற்றுக்கொள்வார்கள் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.