38 C
Chennai
Sunday, June 4, 2023

LIVE: ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் – தொல் திருமாவளவன்.!!

ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும் ஒடிசா ரயில் விபத்துக்கு...

சொன்னதை செய்து காட்டிய ஹிப்ஹாப் ஆதி…கண்கலங்கிய சூப்பர் சிங்கர் பிரபலம்…நெகிழ்ச்சி வீடியோ இதோ.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி...

முழு பலத்தை எட்டிய உச்சநீதிமன்றம்! புதிதாக 2 நீதிபதிகள் பதவியேற்றனர்!

இரு நீதிபதிகள் இன்று பதவியேற்ற நிலையில், அதன் முழு பலமான 34 நீதிபதிகளை பெற்றுள்ளது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளை 2 பேர் புதிதாக பதவியேற்றுள்ளனர். அதன்படி, தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றார். இதுபோன்று, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த  பிரசாந்த் குமார் மிஸ்ராவும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார்.

இந்த 2 பேருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பிரசாந்த் குமார் மிஸ்ராவும், தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனும் பதவியேற்ற நிலையில், உச்சநீதிமன்றம் அதன் முழு பலமான 34 நீதிபதிகளை பெற்றுள்ளது.