அவர் பேசியது கண்டிக்கத்தக்கது – எல்.முருகன்.! பிரச்னையை திசை திருப்புகிறார்கள் – டி.ஆர்.பாலு.!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் ஐந்தாம் நாள் கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் கேள்வி நேரம் இருந்தது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வந்தனர்.

டி.ஆர்.பாலு உரை :

அப்போது மக்களவையில் கேள்வி நேரத்தின் போது திமுக எம் பி டி ஆர் பாலு தமிழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு உரிய பேரிடர் நிவாரண நிதியை அளிக்கவில்லை எனும் குற்றசாட்டை முன்வைத்து இருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணைய அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்து வந்தார்.

கன்னியாகுமரியில் திமுக தேர்தல் அறிக்கை குழு பொதுமக்களிடம் கருத்து கேட்பு..!

எல்.முருகன் குறுக்கீடு :

அந்த சமயம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், டி.ஆர்.பாலு பேச்சில் குறுக்கிட்டு தாங்கள் கூறுவது தவறு என்று பேசி வந்தார். தான் பேசும்போது ஏன் குறிக்கிட்டு பேசுகிறீர்கள் என்று டி.ஆர்.பாலு, எல்.முருகனை கடுமையாக சாடினார் என்றும்,  தயவு செய்து அமருங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்.? இந்த விவகாரத்தில் சபாநாயகர் குறிப்பிட்டு பேச வேண்டும். ஏன் நீங்கள் குறுகீடு செய்கிறீர்கள்.?

நாடாளுமன்ற உறுப்பினருக்கான நெறிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படி தெரிந்திருக்கவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க நீங்கள் தகுதியற்றவர். தயவு செய்து அமருங்கள். எந்தத் துறை அமைச்சரிடம் நாங்கள் கேட்கிறோமோ அந்தத் துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும். நீங்கள் மத்திய இணை மந்திரியாக இருக்க தகுதியற்றவர். விவாதத்தில் பங்கேற்க உங்களுக்கு தைரியம் இல்லை. என்று கடுமையாக சாடினார் என்று கூறப்படுகிறது.

பாஜக – திமுக கடும் வாதம் :

இதனை அடுத்து பாஜக அமைச்சரை, திமுக எம்பி டி.ஆர்.பாலு அவமதித்துவிட்டதாக கூறி திமுக – பாஜக இடையே ஈடுபட்டனர். இதனால் பாஜக மற்றும் திமுக எம்பிக்கள் எழுதிய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை திமுக எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறினர்.

எல்.முருகன் பேட்டி :

இந்நிலையில் இது குறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணைமைச்சர் எல்.முருகன் கூறுகையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் அமைச்சராக இருப்பது திமுகவால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான், டி.ஆர்.பாலு எனது சமூகத்தையும், என்னையும் அவமதித்தார். என்னை தகுதியற்றவர் (Unfit) என்று கூறியது கண்டிக்கதக்கது என கூறினார்.

மேலும், சமூக நீதியை ஓட்டு வங்கியாக மட்டுமே திமுக பயன்படுத்துகிறது. கடந்த 10 ஆண்டுகளில் தலித் சமூகத்தை சேர்ந்த சமூத்தினரை உயர்த்தி பல்வேறு உயர் பொறுப்புகளை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளவர் பிரதமர் மோடி. தமிழ் கலாச்சாரம் மீது மிகுந்த ஆர்வம் அவருக்கு உள்ளது என்று எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறினார்.

டி.ஆர்.பாலு விளக்கம் :

இதனை தொடர்ந்து திமுக எம்.பி டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு புறக்கணிக்கிறது. தமிழக வெள்ள பதிப்பு மற்றும் நிவாரண நிதி குறித்து மக்களவையில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போது நான் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக பாஜகவினர் தொடர்ந்து குறுக்கிட்டார்கள். மக்களவையில் நான் பேசிய போது மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறிக்கிட்டார்.

எல்.முருகன் இடையூறு செய்ததால் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்குமாறு நான் கூறினேன். துறைக்கு சம்பந்தம் இல்லாத எல்.முருகன் குறிக்கிட்டதால் அவரை அமர சொன்னேன். உங்களுக்கு விஷயம் தெரியாது. எனக்கு தெரிந்து வேறு ஏதும் தவறாக நான் கூறவில்லை. உடனே எல்.முருகம் . நான் அவரை அவமதித்துவிட்டதாக பாஜகவினர் கண்டனத்தை தெரிவித்தனர். வெள்ள நிவாரணம் குறித்த கேள்விக்கு மத்திய அரசு உரிய பதிலை அளிக்கவில்லை.

கருப்பு சட்டை போராட்டம் :

தேர்தலை மனதில் வைத்தே பாஜக உறுப்பினர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். தேசிய பேரிடர் நிதி பற்றி பேசும்போது, மாநில பேரிடர் நிதியை பற்றி எல்.முருகன் பதில் கூறுகிறார். பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக கூட்டாக வெளிநடப்பு செய்தோம். நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்களை பேசவிடாமல் பாஜக உறுப்பினர்கள் தடுத்தனர். இதனை கண்டித்து பிப்ரவரி 8இல் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்துவோம் என்றும் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Comment