செல்வராகவன் கெட்டவார்த்தை போட்டு திட்டி விரட்டிட்டாரு! பாவா லட்சுமணன் வேதனை!

Selvaraghavan : செல்வராகவன் தன்னை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக பாவா லட்சுமணன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பு தளங்களில் மிகவும் கோபமாக நடந்து கொள்வார் என சில பிரபலங்கள் பேசி நாம் கேள்வி பட்டு இருக்கிறோம். சரியாக நடிக்க வில்லை டேக் போய்க்கொண்டே இருக்கிறது என்றால் கூட உடனடியாகவே செல்வராகவன் டென்ஷன் ஆகிவிடுவார்.

அப்படி தான் ஒருமுறை காதல் கொண்டேன் படப்பிடிப்பு தளத்தில் கூட தனுஷ் ஒரு காட்சியில் சரியாக நடிக்கவில்லை என்பதால் டேக் போய்க்கொண்டே இருந்த காரணத்தால் கோபத்தில் தனுஷை கன்னத்தில் அறைந்துவிட்டார். இதனை தனுஷே மேடை ஒன்றில் பேசி இருந்தார். இந்நிலையில், தனுஷை தொடர்ந்து பிரபல நடிகரான பாவா லட்சுமணன் பேட்டி ஒன்றில் தான்  செல்வராகவன் என்னை கெட்டவார்த்தை போட்டு திட்டி அனுப்பிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய பாவா லட்சுமணன் ” நடிகர் தனுஷுடன் நான் புதுப்பேட்டை படத்திலே நடித்து கொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு சரியாக நடிப்பு வரவில்லை என்று கூறி இயக்குனர் செல்வராகவன் பயங்கரமாக திட்டி கெட்டவார்த்தை போட்டு உனக்கு நடிக்கவே தெரியவில்லை நீ கிளம்பு என்று அனுப்பிவிட்டார். அந்த சமயம் எனக்கு இது ரொம்பவே வேதனையாக இருந்தது.

நான் மட்டும் இல்லை அங்கு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பாதி உதவி இயக்குனர்கள் செல்வராகவன் கிட்ட திட்டு வாங்குவார்கள். படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வாரார் என்ற தகவல் தெரிந்தாலே போதும் அனைவரும் வேகமாக சென்று எங்கையாவது ஓடி விடுவார்கள். அந்த அளவுக்கு படப்பிடிப்பு தளத்தில் செல்வராகவன் கோபப்படுவார்” எனவும் நடிகர் பாவா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

IPL2024: தொடர் தோல்வியில் மும்பை.. கொல்கத்தா அபார வெற்றி….!

IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…

6 hours ago

‘செட்டில் ஆகிவிட்டு அடிங்க ..’ ! டி20யின் மாற்றத்தை ஆராயும் ரிக்கி பாண்டிங் !

Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…

9 hours ago

நெல்சனின் முதல் தயாரிப்பு.. வித்தியாசமான லுக்கில் கவின்.! கவனம் ஈர்க்கும் ப்ரோமோ வீடியோ!

Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…

9 hours ago

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய பேட் கம்மின்ஸ் ! ஐசிசி தரவரிசையில் ஆஸி. கிரிக்கெட் அணி நம்பர் 1 !!

ICC Ranking  : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…

10 hours ago

20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…

10 hours ago

வேட்டையன் படப்பிடிப்பில் கோட் சூட்டில் கலக்கும் சூப்பர் ஸ்டார்கள்! வைரல் க்ளிக்ஸ்…

Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…

10 hours ago