மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூர்! ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்மிருதி மந்தனா!

WPL பெண்களுக்கான WPL கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.

Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி ..!

இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 66 ரன்கள் எடுத்து இருந்தார். அதைப்போல மும்பை அணியில் பந்துவீச்சில் அதிகபட்சமாக  ஹேலி மேத்யூஸ், நாட் ஸ்கிவர்-பிரண்ட், சைகா இஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.

Read More :- அப்போ இது உண்மை தானா ? பிசிசிஐ எடுத்தது தவறான முடிவா ?

பெங்களூரு அணி 135 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்ததாக 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. ஆனால், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்தது. போட்டியில் வெற்றிபெற்றவுடன் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆனந்த கண்ணீர் விட்டார்.

Read More :- IPL 2024 : காயம் காரணமாக வெளியேறினார் பத்திரனா ..! சிஎஸ்கே அணிக்கு தொடரும் துன்பம்..!

மேலும்,  நாளை மார்ச் 16-ஆம் தேதி WPL தொடரின் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் பெங்களூர் அணியும் டெல்லி அணியும் மோதுகிறது. போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.  பெங்களூர் அணி மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ள நிலையில் ரசிகர்கள் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

Leave a Comment