#AsiaGames: அடுத்த ஆண்டு செப்.23 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகள் – ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்தாண்டு செப்டம்பரில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு.

கொரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெறும் என ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) அறிவித்துள்ளது. ஆசிய விளையாட்டு போட்டிகள் முதலில் இந்த ஆண்டு செப். 10 முதல் 25 வரை Hangzhou-இல் நடத்த திட்டமிடப்பட்டது, ஆனால் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் திருத்தப்பட்ட தேதிகள் குறித்த முடிவை ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் (OCA) குவைத்தில் எடுத்தது. அதன்படி, 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பொதுவாக உலக முழுவதிலும் இருந்து 10,000 விளையாட்டு வீரர்கள்  பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும், 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்து 10 மாதங்களுக்குள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment